தமிழரை தான் மணப்பேன்.. யாருக்கு சிக்னல் கொடுக்கிறார் நடிகை அஞ்சலி!
சென்னை: தமிழரை தான் திருமணம் செய்து கொள்வேன் என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி தமிழில் கற்றது தமிழ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு என பல படங்களில் கலக்கி வந்தார் அஞ்சலி. தமிழில் நடிகர் ஜெய் உடன் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது.
இருவரும் காதலிப்பதாக தமிழ் திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இருவருமே அந்த செய்தியை மறுத்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அஞ்சலி, தன்னுடன் நடித்த பல ஹீரோக்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றார். ஜெய் மட்டும்தான் இன்னும் திருமணம் ஆகாமலிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
மேலும் தான் எப்போது திருமணம் செய்துகொள்வேன் என்று தனக்கு தெரியாது என்ற அவர் அப்படி திருமணம் செய்தால் ஒரு தமிழரைத்தான் திருமணம் செய்வேன் என்றும் கூறினார். அஞ்சலி ஒரு தமிழரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருப்பது ஜெயின் ரசிகர்களை யாரை சொல்கிறார் என்ற எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











