அஜித் சார மீட் பண்ண... அங்க மட்டும்தான் போகணும்!
சென்னை : நடிகர் அஜித் ரசிகர்களால் தல என அன்பாக அழைக்கப்படுபவர்.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது
இந்த நிலையில் நடிகர் ஷாம் அஜித்தை பார்ப்பதற்காகவே மகளின் பள்ளிக்கு சென்று வந்ததாகக் கூறியுள்ளார்

பறக்கும் பைக் ரேஸிங்
நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. அதிரடி சண்டைக்காட்சிகள் மின்னல் வேகத்தில் பறக்கும் பைக் ரேஸிங் என அதிரடியாக தயாராகி வந்த வலிமை கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கத்தில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கியுள்ளார் . மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பார்.

குடும்ப ஆடியன்சை
பொதுவாக அஜித் திரைப்படங்கள் என்றாலே ஆக்சன் கதைகள் மற்றும் குடும்ப ஆடியன்சை கவர்ந்து வருகின்றன சில காட்சிகள் சற்று அதிகமாகவே இருக்கும் ஆனால் அந்த மாதிரி எல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக மட்டுமே இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது இதில் அஜித் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டது

நீண்ட தாடியுடன்
நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கப்பட உள்ளது. இந்த படத்திற்காக முழுவதும் நீண்ட தாடியுடன் பார்க்க ஹாலிவுட் ஹீரோ போல அஜித் மாறியுள்ளார். படபிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித் பொதுவாக பொது நிகழ்ச்சிகளையும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் பேட்டிகளையும் பல ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது

அஜித்தை பார்க்க
எனவே அஜித் மேடைகளிலும் பேட்டிகளிலும் தோன்றாததால் அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் தவம் கிடக்கிறது ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகளும் அஜித்தை பார்க்க வேண்டும் என்ற துடிப்பில் உள்ளனர் அந்தவ கையில் நடிகர் ஷாம் அஜித்தை பார்ப்பதற்காகவே ஒரு முக்கிய இடத்திற்கு சென்றதாக பகிர்ந்துள்ளார்.

மீட் பண்ண ஒரு சந்தர்ப்பம்
ஷாம்முடைய மகளும் அஜித் மகளும் கிட்ஸ் ஏஞ்சல் என்ற பள்ளியில் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் அடிக்கடி நடக்கும் கல்ச்சுரலில் மட்டும் கலந்து கொள்கிறார். அதற்கு காரணமாக அவர் கூறியது கல்ச்சுரளுக்கு அஜித் அங்க கண்டிப்பா வருவாரு அப்போ அவர மீட் பண்ண ஒரு சந்தர்ப்பம் தற்போது அதுக்காகவே ஒவ்வொரு கல்ச்சுரல்களையும் தவறாமல் சென்று விடுவேன் என அஜித்தின் வெறியனாக ஷாம் மாறியுள்ளார்


Click it and Unblock the Notifications











