twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்னிப்பு தமிழ்ல்ல எனக்கு பிடிக்காத வார்த்தை... கோர்ட்டில் முருகதாஸ் திட்டவட்டம்!

    சர்கார் பட விவகாரம் தொடர்பாக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என இயக்குனர் முருகதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழக அரசு- வீடியோ

    சென்னை: சர்கார் படத்தில் தமிழக அரசை விமர்சிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டது தொடர்பாக மன்னிப்பு கேட்க இயலாது என அப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. ஆரம்பம் முதலே சர்ச்சையில் சிக்கிய சர்கார், கதைத்திருட்டு வழக்கிலும் சிக்கி மீண்டது.

    பின்னர் படத்தில் தமிழக அரசையும், இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிட வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர்.

    இடைக்காலத் தடை:

    இடைக்காலத் தடை:

    இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனுத்தாக்கல் செய்தார். இதனால், அவரைக் கைது செய்ய 27ம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மன்னிப்பு கோர வேண்டும்:

    மன்னிப்பு கோர வேண்டும்:

    இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது வாதத்தை வைத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்தார். பின்னர், இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மன்னிப்பு கேட்க மறுப்பு:

    மன்னிப்பு கேட்க மறுப்பு:

    அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சர்கார் படத்தில் அரசின் திட்டங்களை விமர்சிப்பது தொடர்பான காட்சிகள் வைக்கப்பட்டது தனது கருத்துச் சுதந்திரம்' எனத் தெரிவித்த ஏ.ஆர்.முருகதாஸ் இது தொடர்பாக மன்னிப்பு கேட்க இயலாது எனத் தெரிவித்தார்.

    உத்தரவாதம் அளிக்க முடியாது:

    உத்தரவாதம் அளிக்க முடியாது:

    மேலும், இனி வரும் தனது படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்ற உத்தரவாதமும் அளிக்க இயலாது என அவர் மறுப்புத் தெரிவித்தார்.

    உத்தரவு:

    உத்தரவு:

    அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், முருகதாஸைக் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மேலும் இரு வாரங்களுக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    English summary
    Director Murugadoss refused to apologies on sarkar issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X