»   »  அடடா, இதுவல்லவோ அதிசயம்: தனுஷ் தோழியை பார்த்து வியக்கும் பாலிவுட்

அடடா, இதுவல்லவோ அதிசயம்: தனுஷ் தோழியை பார்த்து வியக்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் சக நடிகைகளான தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா பற்றி பேசியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். தான் எந்த ஹீரோக்களுடனும் படுக்கையை பகிராததால் அவர்களுடனான கெமிஸ்ட்ரி நல்லபடியாக இருப்பதாகக் கூறி சக நடிகைகளின் கோபத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் அவர் ஹாலிவுட் பற்றி பேசியுள்ளார்.

 ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்து அமெரிக்காவில் உள்ள யுடிஏ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் சோனம். அவர்கள் சோனம் கபூருக்கு ஏற்ற ஹாலிவுட் பட வாய்ப்பை தேடி வருகிறார்கள்.

படம்

படம்

பாலிவுட் ஆகட்டும் ஹாலிவுட் ஆகட்டும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். என்னை தேடி வரும் அனைத்து படங்களிலும் நடிக்க மாட்டேன். எந்த திரை துறையாக இருந்தாலும் சரி அது சீன திரையுலகமாக இருந்தாலும் சரி நல்ல கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பேன் என சோனம் தெரிவித்துள்ளார்.

 தீபிகா, பிரியங்கா

தீபிகா, பிரியங்கா

நான் ஹாலிவுட் சென்றாலுமே தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா அளவுக்கு வர முடியாது. அவர்களுடன் என்னை ஒப்பிடுவதை நான் எதிர்க்க மாட்டேன் என்கிறார் சோனம்.

வெற்றி

வெற்றி

தீபிகா மற்றும் பிரியங்கா ஆகியோர் ஹாலிவுட்டில் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். நான் அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு அளவுக்கு வருவேன் என்று நினைக்கிறேன். அது போதும் எனக்கு என்று சோனம் கூறியுள்ளார். சோனம் தீபிகா, பிரியங்கா பற்றி பெருமையாக பேசியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

English summary
Bollywood actress Sonam Kapoor said that she can never reach Deepika and Priyanka Chopra's standards of success in Hollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil