Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
‘ஆளவிடுங்கடா சாமி’: ‘சீதா ராமம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில் துல்கர் சல்மான் அதிரடி பேச்சு!
ஐதராபாத்: துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'சீதா ராமம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் வெளீயீட்டு விழாவில் துல்கர் சல்மான் அதிரடியாக பேசியுள்ளார்.
ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்..என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஆலியா பட்டின் ரியாக்ஷன்!

மெகா ஸ்டாரின் வாரிசு
மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தமிழிலும் 'ஓகே கண்மனி', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ஹேய் சினாமிகா' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ராணுவ வீரர்
ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள சீதா ராமம் படத்தில், துல்கர் சல்மான் ராணுவ வீரர் பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். துல்கர் சல்மான் ராணுவ வீரர் கேரக்டரில் நடித்திருந்தாலும், அதிரடி ஆக்சன் காட்சிகள் இல்லாமல், லவ்லி ரொமாண்டிக் ஹீரோவாக தோன்றுவார் எனத் தெரிகிறது.

ட்ரெய்லர் வெளியீடு
'சீதா ராமம்' படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்பட்டன. பாடல்கள், டீசர் என அனைவரிடமும் கவனம் ஈர்த்த 'சீதா ராமம்' படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஐதாராபாத்தில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதேபோல், விரைவில் தமிழ், மலையாள மொழிகளிலும் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் கதை
'சீதா ராமம்' ட்ரெய்லரை பார்க்கும் போதே, படத்தின் கதை இதுதான் என கெஸ் பண்ண முடிகிறது. ராஷ்மிகாவிற்கு வரும் ஒரு கடிதத்தை சீதா என்பவரிடம் கொடுக்க வேண்டும் என, அவரை தேடுகின்றார். ஆனால், அது முடியாமல் போக, சீதாவின் காதலன் ராம்-ஐ முதலில் கண்டுபிடிக்க ராஷ்மிகா முடிவெடுக்கிறார். 1965ம் ஆண்டில் இருந்து தொடங்கும் இந்த கதை, திடீரென துப்பாக்கி குண்டுகள் முழங்க அதிரடியாக நகர்கிறது. அதனிடையே துல்கர் சல்மான், மிருணாள் தாகூரின் மென்மையான காதலும் பல கதைகள் பேசுகின்றன.

இனி இப்படி நடிக்க மாட்டேன்
'சீதா ராமம்' படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வெளியானது முதலே இணையத்திலும் வைரலாகி வருகிறது. இதனிடையே ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய துல்கர் சல்மான், "தான் காதல் படங்களில் மட்டுமே நடிப்பதாகத் தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன. ஒவ்வொரு முறையும் காதல் படங்களில் கமிட் ஆகக் கூடாதென்று நினைப்பேன். ஆனால், சீதா ராமம் படத்தின் கதையை இயக்குநர் ஹனு ராகவபுடி சொன்னதும், இந்தப் படத்தில் நடிக்காமல் இருக்க முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் விடமாட்டாங்க ராசா
'சீதா ராமம்' படமே தனது கடைசிக் காதல் படமாக இருக்கும் என நம்புகிறேன் எனவும் துல்கர் சல்மான் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், துல்கர் சல்மானின் ரசிகர்கள், அவர் ரொமான்டிக் படங்களில் நடிப்பதையே விரும்புகின்றனர். சீதா ராமம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் துல்கர் சல்மான் பேசியது, ஒருபோதும் நடக்காது எனவும், ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.