''கவுத்திட்டியே ராசா''..... 'உச்' கொட்டும் கார்த்திகா!
சென்னை: அன்னக்கொடியை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்று நடிகை கார்த்திகா நாயர் கூறியுள்ளார்.
ராதா மகள் கார்த்திகாவை நாயகியாகப் போட்டு பாரதிராஜா எடுத்த படம்தான் அன்னக்கொடி.
படம் எங்கேயோ போகப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது வேறு எங்கேயோ போய் விட்டது. இதனால் கார்த்திகா அப்செட்டாகியுள்ளார்.

கோ... ஸ்டாப்
கோ மூலம் தமிழுக்கு நடிக்க வந்தவர் கார்த்திகா. கோ, அவருக்கு பெரிய பிரேக்காக அமைந்தது. ராசியான நடிகையாக பார்க்கப்பட்டார். ஆனால் அன்னக்கொடி அதை ஸ்டாப் செய்து விட்டது.

அம்மா செஞ்ச சிபாரிசு
இந்த நிலையில்தான் அன்னக்கொடி படத்தி்ல் என் குலக் கொடி கார்த்திகாவை நடிக்க வைக்க வேண்டும் என்று பாரதிராஜாவிடம் சிபாரிசு செய்து சான்ஸ் வாங்கிக் கொடுத்தார் அம்மா ராதா.

ஆடெல்லாம் மேய்த்து என்ன புண்ணியம்...
படு மாடர்ன் பேக்கிரவுண்டில் வளர்ந்தவர் கார்த்திகா. ஆனால் அன்னக்கொடியி்ல் அவர் ஆடெல்லாம் மேய்த்துக் கஷ்டப்பட்டார்.

பெரும் ஏமாற்றம்
ஆனால் அன்னக்கொடி படம் பெரும் தோல்வியைத் தழுவியதால் கார்த்திகா கடும் கவலையில் இருக்கிறார்.

கிளாமர் கூட காலை வாரவில்லை
இதற்கு முன்பு கிளாமராகக் கூட நடித்திருக்கிறேன். அது கூட காலை வாரவில்லை. ஆனால் அன்னக்கொடி ஏமாற்றி விட்டது.

நான் ஆடு மேய்த்ததை ரசிக்கவி்ல்லை
நான் கிராமத்து வேடத்தில் நடித்ததை ரசிகர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.

ஸாரி.. இனிமே நோ ஆடு...
இனிமேல் இப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். அது எனக்குப் பொருத்தமாக இல்லை என்றார் கார்த்திகா.


Click it and Unblock the Notifications











