பிக்பாஸ் போதும் சாமி... எந்த சீசனுக்கும் இனி போகமாட்டேன் - வையாபுரி ஓப்பன் டாக்! - வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வையாபுரி இனி எந்த சீசனிலும் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : பிக்பாஸ் 2 சீசன் எப்போ ஆரம்பிக்கணும்னு தெரியாது. பிக்பாஸ் முதல் சீசன்லயே கலந்துக்கிட்டது சந்தோஷம். இனி வேறு சீசனில் பங்கேற்க மாட்டேன் என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வையாபுரி கூறியுள்ளார்.
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், செமையான என்டர்டெயினராக 85 நாட்கள் பங்குபெற்றுத் திரும்பிய வையாபுரிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.
புதிய படங்களில் கமிட் ஆகியிருக்கும் நடிகர் வையாபுரி, பிக்பாஸ் நிகழ்ச்சின் மூலம் கிடைத்த பலன்களைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ஸ்க்ரிட் இல்லை
பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேரக்டரா இருப்பாங்க. எங்களது கோவத்தை வெளிப்படுத்த முடியாம அந்தக் கோவத்தை யாருகிகிட்டயாச்சும் காட்டிடுறோம். ஸ்க்ரிப்ட் படி சண்டை போடணும், கோபப்படணும்னுலாம் சொல்லித் தரலை.

பட வாய்ப்பு
எப்பவுமே பட வாய்ப்பு குறைஞ்சிடுச்சுனு சொல்லமாட்டேன். பெரிய படங்களில் வேண்டுமானால் நான் நடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துக்கொண்டேதான் இருந்தேன். பெரிய படங்களில் நான் இல்லைங்கிறதால நான் நடிக்கவே இல்லைனு சொல்லிட்டாங்க. பிக்பாஸ் முடிஞ்சதுக்கு பிறகு இப்ப 'கலகலப்பு 2' படத்தில் நடிக்கிறேன்.

First is best
பிக்பாஸ் 2 சீசன் எப்போ ஆரம்பிக்கணும்னு தெரியாது. எப்போதுமே first is best னு சொல்லுவாங்க. அப்படி முதல் சீசன்லயே கலந்துக்கிட்டது சந்தோஷம். பிக்பாஸில் கலந்துக்கிட்ட நான் 'வீட்டுக்குப் போகணும்.. புள்ளகுட்டிகளைப் பார்க்கணும்'னு புலம்பிக்கிட்டே இருந்தாலும் மக்கள் என்னை 85 நாள் வீட்டுக்குள் வெச்சிருந்தாங்க. முன்னாடி என்னை நடிகனா பார்த்த ரசிகர்கள் பிக்பாஸுக்கு அப்புறம் குடும்பத்துல ஒருத்தனா பாக்குறாங்க.

நான் கலந்துக்க மாட்டேன்
பிக்பாஸ் சீசன் 2 நடந்தால் கண்டிப்பா நான் போகமாட்டேன். எனக்கு பெரிய பாலமாக அமைஞ்சது பிக்பாஸ். என்னை மாதிரி பல கலைஞர்கள் திறமைகளை வச்சிக்கிட்டு வெளியே தெரியாம இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்பு கிடைச்சு இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு மக்கள் மனசுல இடம் பிடிக்கணும். அதனால் இன்னொரு முறை நான் பிக்பாஸ்ல கலந்துக்க மாட்டேன்.

குடும்பத்தில் மகிழ்ச்சி
16 வருசங்களுக்குப் பிறகு வீட்டில் கொலு பண்டிகையில் கலந்துக்கிட்டேன். தனிமையை விரும்புற நான் இத்தனை வருசங்களா வீட்டு நிகழ்ச்சிகள்ல ஆர்வம் காட்டுனது இல்ல. ஆனா, பிக்பாஸ் எனக்கு இப்போ நிறைய கத்துக்கொடுத்திடுச்சு. எனக்கும், என் மனைவிக்கும் இந்த மாற்றத்தில் ரொம்ப சந்தோஷம் என்று கூறியுள்ளார் வையாபுரி.


Click it and Unblock the Notifications











