twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்ப எங்க போனீங்க..? ட்விட்டரில் இனி வாய்ஸ் கொடுக்கமாட்டேன்.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி முடிவு!

    By
    |

    சென்னை: சமூக வலைதளங்களில் இனி வாய்ஸ் கொடுக்கப் போவதில்லை என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடியாக கூறியுள்ளார்.

    Recommended Video

    Sethu Abitha தற்போதைய நிலை? | Lakshmi Stores, Thirumathi Selvam, Vikram

    தமிழில் பிரிவோம் சந்திப்போம், ராவணன், வேட்டைக்காரன், நாடோடிகள் உள்பட பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    பல மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் படங்களையும் டைரக்டர் செய்துள்ளார்.

    தளபதி 65.. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்.. ஆனால், அதை மட்டும் சொல்லல?தளபதி 65.. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்.. ஆனால், அதை மட்டும் சொல்லல?

    நேர்கொண்ட பார்வை

    நேர்கொண்ட பார்வை

    ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர், ஜீ டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் பிரபலமானார். கலைஞர் டிவியில் நேர்கொண்ட பார்வை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

    நடிகை வனிதா

    நடிகை வனிதா

    முறையாக விவாகரத்து பெறாத பீட்டர் பாலை, நடிகை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் வனிதாவுக்கு எதிராகவும் பீட்டர்பாலின் மனைவி ஹெலனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பலர் பதிவு செய்தனர். இதுபற்றி நடிகைகள், கஸ்தூரியும் லட்சுமி ராமகிருஷ்ணனும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

    சர்ச்சையாக மாறியது

    சர்ச்சையாக மாறியது

    இதற்கு வனிதா, பதிலளித்தார். பதிலுக்கு பதில் என இது பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த விவகாரம் தொடர்பாக, நடிகை வனிதாவையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் ஒரு மீடியா நேரலையில் பேச வைத்தது. அதில் பேசிய நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அநாகரிகமாகப் பேசினார். 'நீ என்ன ஹைகோர்ட் ஜட்ஜா? லாயரா? எதுக்கு இந்த பிரச்னையில தலையிடறே? எனறு வனிதா கேட்டார்.

    விளாசித் தள்ளினார்

    விளாசித் தள்ளினார்

    பிறகு ஒரு கட்டத்தில், வாடி போடி என்று அழைக்கத் தொடங்கிய வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை சரமாரியாக அசிங்கமாக விளாசித் தள்ளினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பானது. இதையடுத்து வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணனும், லட்சுமி மீது வனிதாவும் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர்.

    பெண்ணுரிமை போராளிகள்

    பெண்ணுரிமை போராளிகள்

    பிறகு இந்த பிரச்னை அமைதியானது. இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, நடிகையும் எம்.பியுமான சுமலதா இடுப்பில் கை வைத்ததாக செய்தி பரவியது. அதை டேக் செய்த நெட்டிசன் ஒருவர், இதை பற்றி பெண்ணுரிமை போராளிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் டேக் செய்து, ட்விட்டரில் கேட்டிருந்தார்.

    நிறுத்தி விட்டேன்

    நிறுத்தி விட்டேன்

    இதற்கு பதிலளித்துள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'நான் எந்த அரசியல் கட்சி/குழு/ஜாதி/ திரைப்படத் துறை, சார்ந்தவள் இல்லை, ஒரு தனிப்பட்ட கலைஞர். குடும்பம்தான் எனக்கு எல்லாம். என்னால் முடிந்த உதவிகளை என் நிகழ்ச்சிகள் வழியாகவும் மற்ற வழிகளிலும் செய்துகொண்டே இருப்பேன். சமூக ஊடகங்களில் குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். என்னை tag செய்யாதீர்கள்' என்று கூறியுள்ளார்.

    சாதி அரசியல்

    சாதி அரசியல்

    மற்றொரு பதிவில், இப்போ என்னை டேக் செய்பவரெல்லாம் என்னை தாக்கிய போது எங்கே இருந்தீங்க? என் போராட்டங்களை என் குடும்பத்தோடும், என்னை புரிந்துகொண்ட மக்கள் ஆதரவுடனும் நான் பாத்துக்கறேன். உங்க சாதி அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. எனக்கு டேக் செய்யாதீங்க. நன்றி என்று கூறியுள்ளார்.

    English summary
    Actress Lakshmi Ramakrishnan said that she won't be rose her voice through social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X