“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் !

இனி கவின் - லாஸ்லியா விவகாரத்தில் தலையிட மாட்டேன் என சேரன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Cheran Tweet:இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது

சென்னை: கவின், லாஸ்லியா பெயரையே இனி நான் சொல்ல மாட்டேன் என காட்டமாகத் தெரிவித்துள்ளார் சேரன்.

பிக் பாஸ் சீசன் 3 நல்ல ஒரு சினிமாவைப் போல் கலவையான காட்சிகளோடு நடந்து முடிந்திருக்கிறது. கவின், லாஸ்லியா காதல், சேரன் - லாஸ்லியாவை வைத்து அப்பா-மகள் பாசம் என பிக் பாஸ் வீடு இம்முறை பாசத்திற்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருந்தது.

கவின் - லாஸ்லியா காதலுக்கு சேரன்தான் எதிராக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஆரம்பத்தில் இருந்தே கவிலியா ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்போது நிகழ்ச்சி முடிவடைந்து விட்ட நிலையிலும் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை அவர்கள் சமூகவலைதளங்களில் கூறி வருகின்றனர்.

சேரன் கோபம்

தொடர்ந்து தன் மீது கூறப்பட்டு வரும் புகார்களால் கோபமடைந்த இயக்குநர் சேரன், இதுதொடர்பாக கோபமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "உங்களுக்கு பிடித்தவர்களை பிபி வீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன். அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்", என கூறியுள்ளார்.

கவின் விவகாரம்

மேலும், "தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சினை தீராது. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை. நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் பிரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்", என்றும் சேரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தான் நல்லது

இதே போல் மற்றொரு பதிவில், "கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சினைக்கு வரவேண்டாம்", என்றும் சேரன் தெரிவித்துள்ளார்.

வருத்தம்

மற்றொரு பதிவில் அவர், "நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி", என சேரன் கோபப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

சேரனின் இந்த டிவீட்டுகளை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். "இவர்களுக்கு பதில் சொல்லி உங்க நேரத்தை ஏன் வீண் செய்கிறீர்கள், இன்னும் இரண்டு வருடத்தில் கவின், லாஸ்லியா என்ற இரண்டு பெயர்களையும் இவர்களே மறந்து விடுவார்கள்... உங்களின் அடுத்த படைப்பை காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், நீங்கள் அதில் கவனம் செலுத்துங்கள்", அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: cheran kavin losliya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X