»   »  தொடரும் மோடியின் மௌனம்... தேசிய விருதுகளை திருப்பித் தரப் போகிறேன்! - பிரகாஷ் ராஜ் ஆவேசம்

தொடரும் மோடியின் மௌனம்... தேசிய விருதுகளை திருப்பித் தரப் போகிறேன்! - பிரகாஷ் ராஜ் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரதமர் மௌனம் காப்பது வருத்தமாக உள்ளது. இந்த மௌனம் தொடர்ந்தால் என்னுடைய தேசிய விருதுகளை திருப்பித் தரப் போகிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், "கௌரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மவுனமாக இருப்பதன் மூலம், தன்னைவிட மிகச் சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபிக்கிறது.

I will return my National Awards

இதுபோன்ற கொடூர சம்பவங்களில் தொடர்ந்து மோடி மௌனமாக இருந்தால், என்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப அளிக்கவும் தயங்க மாட்டேன்," என்றார்.

English summary
Actor Prsakash Raj says that he would return his National Awards whether PM Modi's silence continues in Gowri Lankesh murder case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil