twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்க தயார்... சர்ச்சை பேச்சை நியாயப்படுத்தும் கங்கனா

    |

    மும்பை : சர்ச்சை கருத்துக்களை சொல்லி, தலைப்புச் செய்தியில் இடம் பிடிப்பது கங்கனா ரணாவத்திற்கு ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு, பலரின் எதிர்ப்பையும் சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் கங்கனா.

    Recommended Video

    Thalaivi Kangana Ranaut EXCLUSIVE INTERVIEW | Vijay தான் என்னோட Ultimate Hero

    அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் இது தானாம்... வலிமை நடிகர் வெளியிட்ட தகவல் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் இது தானாம்... வலிமை நடிகர் வெளியிட்ட தகவல்

    இவரின் சர்ச்சை பேச்சுக்களால் இவரின் கணக்கை, ட்விட்டர் முடக்கியது. இதனால் இன்ஸ்டாகிராமில் கணக்கை துவக்கி, கருத்துக்களையும், ஃபோட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார் கங்கனா ரணாவத்.

    பத்மஸ்ரீ விருது

    பத்மஸ்ரீ விருது

    சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விழாவில், திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருதினை வாங்கினார் கங்கனா. இதைத் தொடர்ந்து இந்திய சுதந்திரம் பற்றி சர்ச்சைக்குரிய வயைில் கருத்து தெரிவித்தார் கங்கனா.

    பேசியது தவறில்லை

    பேசியது தவறில்லை

    1947 ல் நாம் வாங்கியது பிச்சை என கங்கனா பேசி இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கங்கனாவின் பேச்சிற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தனது பேச்சில் எந்த தவறும் இல்லை என தன்னை நியாயப்படுத்தி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

    விருதை திருப்பி தருகிறேன்

    விருதை திருப்பி தருகிறேன்

    யாராவது எனக்கு தெளிவுபடுத்துங்கள். நான் பேசியதில் ஏதாவது தவறு உள்ளது என யாராவது நிரூபித்தால் எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை திருப்பித் தர தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன். தயவு செய்து யாராவது எனக்கு இதில் உதவுங்கள் என கங்கனா ரணாவத் குறிப்பிட்டுள்ளார்.

    விளக்கம் தாருங்கள்

    விளக்கம் தாருங்கள்

    கங்கனா, சுதந்திர போராட்ட வீரர் ராணி லட்சமி பாயாக நடித்துள்ளார். அந்த படத்தில் நடிப்பதற்கு முன் தான் இந்திய வரலாறு பற்றி ஆய்வு மேற்கொண்டதாகவும், தேசப்பற்று அதிகரித்தது. ஆனால் எதற்காக அது திடீரென மரணித்தது. காந்தி எதற்காக பகத் சிங் சாவதற்கு அனுமதித்தார். காந்தியின் ஆதரவை பெறாமல், நேதாஜி கொல்லப்பட்டது ஏன். ஆங்கிலேயர்களால் எப்படி பிரிவினையை ஏற்படுத்த முடிந்தது. இவற்றிற்கு பதில் தாருங்கள் எனவும் கங்கனா கேட்டுள்ளார்.

    அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

    அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

    கங்கனாவின் இந்த போஸ்ட் வைரலானதால் மும்பை ஆம் ஆத்மி கட்சியினர் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். ஆம் ஆத்மி கட்சியை தொடர்ந்து பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கங்கனாவின் சர்ச்சை பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர்.

    English summary
    Kangana Ranaut defends her controversial statement about indian independence. she says that if anyone proves her statement as wrong she is ready to return her padmashri award. after kangana's post goes viral, political parties filed complaint against kangana.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X