twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’உங்கள் கழிப்பறையை நானே கழுவுவேன்’..தேர்தல் தோல்வியால் உறவு இல்லாமல் போகாது..கமல்

    |

    தேர்தல் தோல்விக்குப்பின் முற்றிலும் நேரடி அரசியல் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கியிருந்த கமல்ஹாசன் மீண்டும் தொகுதி மக்களை சந்தித்தார்.

    விக்ரம் பட தயாரிப்பு, நடிப்பில் கவனம் செலுத்திய கமல்ஹாசன் அதன் வெற்றியால் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறார். சூட்டோடு சூடாக இந்தியன் 2 பட படபிடிப்பையும் தொடங்கிவிட்டார்.

    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் தொகுதி மக்களை சந்திக்க கோவை வந்தார்.

     மீண்டும் மக்கள் நீதி மய்யம் அவதாரம்

    மீண்டும் மக்கள் நீதி மய்யம் அவதாரம்

    நடிகர் கமல்ஹாசன் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் அவதாரமெடுத்தார். சில காலமாக தீவிர நடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் மீண்டும் மக்கள் பணியைத் தொடங்கி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் ரஜினிகாந்த வெற்றிடத்தை நிரப்புவேன் என அறிவித்துக்கொண்டிருக்கும்போதே கமல்ஹாசன் திடீரென கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

     சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய கமல்

    சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய கமல்

    2021 சட்டசபைத் தேர்தலில் கமல் மாநிலம் முழுக்க பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசனே தோல்வியை தழுவி ஒரு இடம் கூட பெற முடியாமல் கட்சி படுதோல்வி அடைந்தது. வாக்கு சதவீதமும் 2.6% ஆக குறைந்தது. கோவை தெற்கு தொகுதியில் மகேந்திரனின் செல்வாக்கினால் வெல்லலாம் என்று போட்டியிட்ட கமல் 1728 வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசனிடம் தோற்றுப்போனார்.

     விக்ரம் வெற்றி தந்த உற்சாகம்

    விக்ரம் வெற்றி தந்த உற்சாகம்

    தேர்தல் தோல்விக்கு பின் தீவிர அரசியலில் கவனம் செலுத்தாமல் அடுத்த பட தயாரிப்பில் இறங்கினார். விக்ரம் பட தயாரிப்பில் ஈடுபட்டார். அப்படம் பெருவெற்றி பெற்றது. இதனால் உற்சாகமான கமல் சூட்டோடு சூடாக இந்தியன் 2 படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டார், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அக்டோபர் முதல் கலந்துக்கொள்கிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தொகுதி மக்களை பார்ப்பதற்காகோவையில் 2 நாள் முகாமிட்டுள்ளார்.

     அரசுப்பள்ளி மாணவிகளிடம் சந்திப்பு

    அரசுப்பள்ளி மாணவிகளிடம் சந்திப்பு

    காலையில் கோவை ராஜவீதி அரசு பள்ளிக்கு சென்ற கமல்ஹாசன் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அந்த பள்ளியில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை திறந்து வைத்த கமல்ஹாசன் கழிப்பறை வசதியை செய்து தர அரசு சம்மதித்துள்ளது. அரசை சம்மதிக்க வைத்த வேலையை செய்துள்ளோம் என பேசினார். நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேச ஒட்டுமொத்த பள்ளி மாணவிகளும் சூழ்ந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

     கோவை தெற்கு தொகுதியில் கமல் முகாம்

    கோவை தெற்கு தொகுதியில் கமல் முகாம்

    கோவை தெற்கு தொகுதிக்குச் சென்ற கமல், அங்கு மக்களைச் சந்தித்து தொகுதிகளில் இருக்கும் முக்கிய குறைகளைக் கேட்டறிந்தார். கெம்பட்டி காலனி பகுதியில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்த கமல், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடையே பேசிய அவர், "800 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் போதிய கழிவறைகள் கூட இல்லை. ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருக்கிறது. கழிவறையை நாங்களே கட்டித் தருகிறோம்.

     கழிவறையை நானே சுத்தம் செய்வேன் - கமல்ஹாசன்

    கழிவறையை நானே சுத்தம் செய்வேன் - கமல்ஹாசன்

    இது தேர்தல் வாக்குறுதி எல்லாம் இல்லை. எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இப்ப கிராம சபையை நடக்கிறது என்றால் அதற்கு நாங்களும் தான் ஒரு காரணம். மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு, சமூகத்திற்கும் எங்களுக்கும் இருக்கும் உறவு. புரிந்து கொள்ளுங்கள் நாங்கள் கட்டித்தரும் கழிப்பறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் பொறுப்பு. கண்டிப்பாக இதைப் பார்க்க நான் வருவேன். அப்போது சுத்தமாக இல்லையென்றால் நானே இறங்கி சுத்தம் செய்வேன்.

     தளபதி மகேந்திரன் திமுகவில் ஐக்கியம்

    தளபதி மகேந்திரன் திமுகவில் ஐக்கியம்

    கடந்த தேர்தலில் எனக்குத்தான் வாக்களித்ததாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால் யார் தோற்கடித்தார்கள் என்பதை மக்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்" என்று பேசினார். இடைப்பட்ட காலத்தில் பார்த்துவிட்டு போவோம் என்று வந்தாரா? அல்லது தொகுதியில் இறங்கி வேலை செய்யவேண்டும் என நினைத்து வந்தாரா தெரியாது. ஆனால் கோவை தெற்கு தொகுதியில் எப்போதும் செல்வாக்காக இருக்கும் மகேந்திரன் இப்போது கமலின் தளபதி அல்ல, திமுகவில் இருக்கிறார். கமல் செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

    English summary
    After the election defeat, Kamal Haasan, who had stayed completely away from direct political activity, once again met the people of the constituency. Kamal Haasan, who focused on the production and acting of Vikram, is very happy with its success. He has also started the shooting of Indian 2. Bigg Boss season 6 will also be a part of the show. In the meantime, he came to Coimbatore to meet the people of the constituency.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X