Exclusive : '96 படத்தில் மட்டுமல்ல.. விஜய் சேதுபதி நிஜத்திலும் அப்படித்தான்: வர்ஷா பொல்லம்மா!

நடிகை வர்ஷா பொல்லம்மா நடித்த சீமத்துரை படம் நாளை ரிலீசாகிறது.

Recommended Video

விஜய் சேதுபதி நிஜத்திலும் அப்படித்தான்: வர்ஷா- வீடியோ

சென்னை: விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுவதாக 96 பட நாயகி வர்ஷா பொல்லம்மா தெரிவித்துள்ளார்.

96 திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்து, இளவட்டங்களை கிறங்கடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. 2015ல் சதுரன் படம் மூலம் தமிழ் சினிவாமில் ஹீரோயினா அறிமுகமான இவருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது 96 திரைப்படம்.

இதையடுத்து இவர் தமிழில் பிஸியாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார். வர்ஷா ஹீரோயினாக நடித்த சீமத்துரை திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.

படத்தின் புரோமோஷன் வேலைக்காக சென்னை வந்திருந்தவரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து....

குடகு பெண்:

குடகு பெண்:

"என் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குடகு. இப்போது பெங்களூருவில் செல்ட்டில் ஆகிவிட்டேன். தமிழ் சினிமாவில் தான் முதலின் அறிமுகமானேன். அதன் பிறகு மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளேன்.

பெரிய பட்ஜெட் படம்:

பெரிய பட்ஜெட் படம்:

96 திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இப்போது ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் கமிட்டாகியுள்ளேன். ஜனவரியில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழில் தான் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறேன். எனவே இங்கு வீடு எடுத்து தங்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

கிராமத்துப் பெண் கேரக்டர்:

கிராமத்துப் பெண் கேரக்டர்:

சீமத்துரை படத்தில் பூரணி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதில் என்னுடைய லுக் வித்தியாசமாக இருக்கும். அற்புதமான கதாபாத்திரம். படம் நன்றாக வந்துள்ளது. நிச்சயம் வெற்றி பெரும் என நம்புகிறேன்.

நிஜத்திலும் அப்படி தான்:

நிஜத்திலும் அப்படி தான்:

96 படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். படத்தில் அவர் எனக்கு ஆசிரியராக நடித்திருப்பார். நிஜத்திலும் அப்படி தான். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரே நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.

சகஜமாக பழகுவார்:

சகஜமாக பழகுவார்:

எப்படி நடிக்க வேண்டும், நடிக்கும் போது என்ன செய்ய வேண்டும், டேக் வாங்காமல் நடிப்பது எப்படி என்பது உள்பட நிறைய விஷயங்களை கற்றுத் தந்தார். தான் ஒரு முன்னணி நடிகர் என்பதை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் மிக சகஜமாக பேசிப்பழகுவார்.

பெரிய லிஸ்ட்:

பெரிய லிஸ்ட்:

எனக்கு நிறைய பேருடன் நடிக்க ஆசை இருக்கிறது. அது ஒரு பெரிய லிஸ்ட். ஆனால் விஜய் சேதுபதியின் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். விரைவில் அது நிறைவேறும் என நினைக்கிறேன்", என வர்ஷா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X