வைரமுத்துட்ட ஒன்னும் நடக்கலனதும் நானா, சின்மயியை சும்மா விட மாட்டேன்: ராதாரவி

By Siva

Recommended Video

சின்மயி சொல்வது எல்லாம் பொய் - ராதாரவி- வீடியோ

சென்னை: சின்மயியை சும்மா விடப் போவது இல்லை என்று டப்பிங் சங்க தலைவர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி சின்மயி தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக அவர் தென்னிந்திய டப்பிங் கலைஞர் சங்க தலைவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் ராதாரவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டமே கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் சின்மயி.

ராதாரவி

ராதாரவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை. நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி சான் ஆகியோரின் பெயர்கள் உள்ளதே தவிர ராதாரவியின் பெயர் இல்லை என்று ட்வீட்டினார் சின்மயி.

கடிதம்

ராதாரவிக்கு டத்தோ பட்டம் வழங்கவில்லை என்று மலேகா அரசு அனுப்பி வைத்த கடிதத்தை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டு தான் பொய் சொல்லவில்லை என்றார்.

சின்மயி

சின்மயி

சின்மயி வைரமுத்துவை பிளாக்மெயில் செய்து பார்த்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்றதும் என் பக்கம் திரும்பிவிட்டார். மலேசியாவில் டத்தோ பட்டம் வழங்குவது யார் என்று கூட அவருக்கு தெரியவில்லை. நான் டத்தோ பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.

வெளியூர்

வெளியூர்

நான் புதுக்கோட்டையில் உள்ளேன். சென்னைக்கு திரும்பி வந்ததும் டத்தோ பட்டம் பெற்றதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். சின்மயி வெளியிட்டுள்ள கடிதம் போலி என்று சந்தேகப்படுகிறேன். சின்மயியை சும்மாவிட மாட்டேன். எனக்கு டத்தோ பட்டம் அளித்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்கிறார் ராதாரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X