என்னால் உங்களுக்கு ஓட்டு போட முடியாது: உதயநிதி ஸ்டாலின் பட இயக்குனர் அதிரடி #Thalaivar

By Siva

சென்னை: ஒரு தமிழனாய் என்னால் உங்களுக்கு வாக்கு அளிக்க முடியாது என்று இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் அறிவிப்பை கேட்டு அவரின் ரசிகர்கள் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சி இல்லை.

ரஜினி

@superstarrajini நான் உங்களின் தீவிர ரசிகன். ,
இதை என் முதல்படைப்பிலேயே பதிவு செய்தவன்.
ஆனால் ஒரு தமிழனாய்,
என்னால் உங்களுக்கு வாக்கு அளிக்கமுடியாது.
இனி ஒரு விதிசெய்வோம்
அது யாதனில்-இனி நம் தமிழ்மண்ணை ஒரு தமிழனே ஆளவேண்டும்.என்றும் எங்கள் SUPER STARக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இல்லை

பிரிவினைவாதம் பேசாதிங்கண்ணே என்று ஒருவர் கமெண்ட் போட்டதை பார்த்துவிட்டு பிரபாகரன் கூறியிருப்பதாவது, இல்லங்க. என் உணர்வை பதிவு செய்தேன்...என்றார்.

தமிழ்

அவர் 43 ஆண்டுகளாக தமிழகத்தில் வசிக்கிறார். அவரின் மனைவி தமிழச்சி. அவரின் மகள்கள் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து, தமிழ் பேசுபவர்கள். இருவரும் தமிழர்களை திருமணம் செய்தார்கள். அவரின் பேரன்கள் தமிழர்களாக வளர்கிறார்கள். ரஜினியும் தமிழ் தான். தமிழனா பிறக்கிறவன் மட்டும் தமிழன் கிடையாது என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

முடியாது

அது உங்கள் கருத்து., ஒரு ரசிகனாக இன்றைய தமிழ் சினிமாவின் தலைவனாக super starரைத்தான் சொல்கிறோம்., அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் தமிழ் நாட்டின் தலைவனாக என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை என்கிறேன் இதில் நீங்கள் கோவப்பட என்ன இருக்கிறது என பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X