நடிப்பு விசயத்தில் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் - தமன்னா
சென்னை: நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் என்னுடைய 13 வயதிலேயே திரைத்துறையில் நடிக்க வந்துவிட்டதால் அன்று முதல் இன்று வரை சில கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறேன். இது வரையில் நான் எந்த ஒரு திரைப்படத்திலும் முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாது. அதை என்றும் நான் மாற்றி கொள்ளப்போவதில்லை. இதற்கு ஒப்புதல் அளிக்கும் படங்களில் மட்டுமே நான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் முதன்மையானவர் தமன்னா. தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளார். கம்பீரமான பீரியாடிக் படங்களாக இருக்கட்டும், ஆக்ஷன், கூல் கேர்ள், காமெடி என அனைத்து விதமான படங்களிலும் தன்னை நிரூபித்தவர். கண்டேன் காதலை படத்தில் நடித்த தமன்னாவா இது என்று நாம் அசந்து போகும் வகையில் பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அவரின் நடிப்பிற்கு தீனியாக அமைந்த மற்றுமொரு திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் காதலியாக ஒரு நடன கலைஞராக சிறப்பாக நடித்துள்ளார். சயீரா படத்தில் நயன்தாரா மற்றும் தமன்னா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தாலும் பெரும்பான்மையான பாராட்டுக்கள் கிடைத்தது தமன்னாவிற்கே. இப்படம் அவருக்கு திரையுலகில் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.
அக்டோபர் 11ஆம் தேதியான நேற்று தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த செண்டிமெண்ட் ஆக்ஷன் ஹாரர் திரைப்படமான பெட்ரோமேஸ் திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்துவரும் தமன்னா படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்.
மேலும் எந்த ஒரு மொழிப் படமாக இருப்பினும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னரே, தான் முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மிகவும் கண்டிப்புடன் கூறிவிடுகிறார். அதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் என்கிறார்கள் சினிமா வட்டரங்கள்.
மேலும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் என்னுடைய 13 வயதிலேயே திரைத்துறையில் நடிக்க வந்துவிட்டதால் அன்று முதல் இன்று வரை சில கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறேன்.
இது வரையில் நான் எந்த ஒரு திரைப்படத்திலும் முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாது. அதை என்றும் நான் மாற்றி கொள்ளப்போவதில்லை. இதற்கு ஒப்புதல் அளிக்கும் படங்களில் மட்டுமே நான் நடிப்பேன் என்று கண்டிஷனாக தெரிவித்துள்ளார் தமன்னா.
நல்ல ஒரு பாலிசியை கடைபிடிக்கிறார் தமன்னா. முத்தக்காட்சிகளில் நடிக்க பல ஹீரோயின்கள் இருக்கிறார்கள். அது இல்லாமலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் நெஞ்சில் கொடி கட்டி பறக்கிறார் தமன்னா.


Click it and Unblock the Notifications