மோடியிடம் அமலாவுக்கு சீட் கேட்கவில்லை.. சும்மா கொடுத்தாலும் வேணாம்!- நாகார்ஜூனா
ஹைதராபாத்: மனைவி அமலாவுக்கு சீட் கேட்டு மோடியைச் சந்திக்கவில்லை என்று நடிகர் நாகார்ஜூனா தெரிவித்தார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நேற்று அமதாபாத் சென்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இருவரும் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அமலாவுக்கு சீட்?
சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தனது மனைவி அமலாவுக்கு தேர்தல் டிக்கெட் கேட்பதற்காக அவர் மோடியைச் சந்தித்ததாக ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், இந்தச் செய்திகளை நாகர்ஜூனா மறுத்தார். மூத்த தலைவர் வெங்கையாநாயுடு அழைப்பின் பேரில் மோடியைச் சந்தித்ததாகக் கூறிய அவர், மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ச்சியைப் பார்க்க வந்ததாகக் கூறினார்.

விளம்பரப் படம்
மேலும் அவர் கூறுகையில், "ஏழைகளுக்கும், கார்ப்பரேட் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிந்த மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி கொண்டு வந்த மருத்துவ திட்டம் என்னை கவர்ந்தது. அதற்காகவே அவரது அரசின் விளம்பர படத்தில் நடித்தேன்.

மாதிரி கிராமம்
அப்போது பாரதீய ஜனதா தலைவர் வெங்கையாநாயுடு, குஜராத் சென்று வாருங்கள் மோடியின் திட்டம் உங்களை கவரும் என்றார். அவரது அழைப்பை ஏற்று குஜராத் சென்றேன். அங்குள்ள மாதிரி கிராமத்தை பார்த்தேன்.

மோடிக்கு ஆதரவு
ஹைடெக் நகரமான ஹைதராபாத்தில் கூட 3 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. ஆனால், குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது.
குஜராத் மாநில வளர்ச்சி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. மோடி பிரதமர் ஆனால் ஆந்திராவும், குஜராத் போல முன்னேற்றம் அடையும் என்று கருதுகிறேன். அதனால் அவரை நேரில் சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன்.

சும்மா கொடுத்தாலும் வேணாம்...
பாரதீய ஜனதா கட்சியில் சேரும் எண்ணமோ, பிரசாரம் செய்யும் திட்டமோ இல்லை. எனக்கோ, எனது மனைவிக்கோ தேர்தல் சீட் கேட்கவில்லை.
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் ஆர்வம் இல்லை. சும்மா சீட் கொடுத்தாலும் போட்டியிட மாட்டோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











