அட்ஜெஸ்ட் பண்ணியிருந்தா இந்நேரம் பெரிய நடிகையாயிருப்பேன்.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய வரு!

சென்னை: தான் மட்டும் படுக்கையை ஷேர் செய்திருந்தால் இந்நேரம் பெரிய நடிகையாகியிருப்பேன் என நடிகை வரலட்சுமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Varalakshmi Opens up #MeeToo | Varalakshmi Sarathkumar | Neeya 2

நடிகை வரலட்சுமி போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தப் படம் 2012ஆம் ஆண்டு ரிலீஸானது.

இதனை தொடர்ந்து தமிழில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து தவித்து வந்தார். கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

பின்னர், 2016ஆம் ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் தமிழில் நடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, விஷாலுடன் சண்டைக்கோழி 2, விஜயுடன் சர்கார், தனுஷுடன் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வெல்வெட் நகரம்

வெல்வெட் நகரம்

தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெல்வெட் நகரம் படம் வரும் வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஒரு பத்திரிக்கையாளராக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தில் வரலட்சுமிதான் லீடிங் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தை மனோஜ் குமார் நடராஜன் இயக்கி இருக்கிறார் .

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இந்நிலையில் நடிகை வரலட்சுமி கடந்த சில நாட்களாக மீடியாக்கள் பலவற்றுக்கும் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து வருகிறார். வெல்வெட் நகரம் படத்தின் விளம்பரத்திற்காக தான் அவர் இப்படி பேட்டி கொடுப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசி வருகிறார் வரலட்சுமி.

ஏன் நடிக்கவில்லை?

ஏன் நடிக்கவில்லை?

மேலும் பட வாய்ப்புக்காக தன்னை பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை வரலட்சுமி, போடா போடி படத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் தான் படங்களில் நடிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பெரிய நடிகையாகியிப்பேன்

பெரிய நடிகையாகியிப்பேன்

போடா போடி படத்திற்கு பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வந்ததாக கூறிய வரு, அதற்காக தன்னை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களுடன் அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள் என்றார். அதற்கு தான் ஒத்துழைக்காததால் தான் தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என்றார். தான் ஒரு வேளை அட்ஜெஸ்ட் செய்திருந்தால், பெரிய நடிகை ஆகியிருப்பேன் என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

மேலும் அதற்கெல்லாம் நான் ஆளில்லை என்று கூறி நேர்மையான முறையில் நடிக்க ஒப்புக்கொண்டதால் தான் இத்தனை நாட்களாக படங்களில் அதிகமாக நடிக்க முடியவில்லை என்றும் கூறினார். வரலட்சுமியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்ட்டிதான்

ஆன்ட்டிதான்

நடிகை வரலட்சுமி, அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை ராதிகா என்னுடைய அம்மா இல்லை, என் அப்பாவுக்கு இரண்டாவது மனைவி, அவரை நான் ஆன்ட்டி என்று தான் அழைப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார். அவரது இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X