அட்ஜஸ்ட் செய்திருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன்.. ராய் லட்சுமி பகீர்!
அட்ஜஸ்ட் செய்திருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன் என ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை: அட்ஜஸ்ட் செய்திருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன் என ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை ராய் லட்சுமி முதன்முதலாக, 'ஜூலி-2' என்ற இந்தி படத்தில், கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ராய் லட்சுமி சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜூலி-2 படத்தில், நான் படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு தகவல் பரவியிருக்கிறது என்றார்.

படம் பார்த்தால் அனுதாபம் வரும்..
ட்ரைலரை பார்த்தவர்களுக்கு அப்படித்தான் தோன்றும் என்றும் ராய் லட்சுமி கூறினார். ஆனால், முழு படத்தையும் பார்ப்பவர்களுக்கு என் கதாபாத்திரம் மீது அனுதாபம் வரும் என்றார்.

படுக்கையை பகிர்ந்தால்..
மேலும் சினிமாவில், சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதாக கூறிய அவர், படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என்று சில நடிகைகள் துணிச்சலுடன் சொல்லி வருகிறார்கள் என்றார்.

4 வருடங்கள் போராட்டம்..
ஆனால் அதுபோன்ற அனுபவம் எனக்கு நேரடியாக ஏற்படவில்லை என்ற அவர் தமிழில் கற்க கசடற படத்துக்குப் பின் தனக்கு புதிய பட வாய்ப்புகளே வரவில்லை என்றார். பட வாய்ப்புகளுக்காக 4 வருடங்கள் போராடியதாகவும் அவர் கூறினார்.

அட்ஜஸ்ட் செய்து போகும்படி.
அப்போதுதான் தனக்கு மறைமுகமாக அந்த அனுபவம் ஏற்பட்டதாகவும் ராய் லட்சுமி கூறியுள்ளார். பட வாய்ப்புக்காக தன்னை அட்ஜஸ்ட் செய்து போகும்படி கூறினார்கள் என்றும் ராய் லட்சுமி தெரிவித்தார்.

லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன்
தான் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் சம்மதித்து இருந்தால், லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன் என்றும் ராய் லட்சுமி கூறியுள்ளார். ராய் லட்சுமியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











