ஷூட்டிங்கில் நடந்த விபரீதம், நான் செத்திருப்பேன்: வாரிசு நடிகை பரபரப்பு பேட்டி

By Siva

மும்பை: படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே டைகர் ஷ்ராஃபின் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படம் மூலம் நடிகையாகியுள்ளார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. படத்தை பார்த்தவர்கள் மூளையை கழற்றி வைத்துவிட்டு படம் எடுத்திருக்கிறார்கள் என்று விளாசினார்கள்.

இந்நிலையில் அனன்யா அந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது,

விபத்து

விபத்து

ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 ஷூட்டிங்கின்போது நான் உயிர் இழந்திருக்கக்கூடும். காரின் ஏர்பேக்ஸ் திறந்து கொண்டது, என்னை காப்பாற்ற ஓடி வந்த டைகரோ கார் வெடிக்கப் போகிறது என்பதை உணர்ந்து ஓடிவிட்டார். அனைவரும் என்னை காரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் படத்தை பார்த்தபோது நான் அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்த அந்த காட்சி இல்லை.

10 டேக்

10 டேக்

என் அறிமுக காட்சியின்போது கார் ஸ்பின்னாக வேண்டும், என் தலைமுடி காற்றில் பறக்க வேண்டும். கார் ஸ்பின்னானது ஆனால் அன்னைக்குன்னு பார்த்து காற்றடிக்கவே இல்லை. அதனால் என் முடி பறக்கவில்லை. எனவே 10 டேக் போனோம். அப்படி இருந்தும் என் தலைமுடி பறக்கவில்லை. இதை பார்த்த இயக்குநர் புனித் மல்ஹோத்ராவோ, முடி பறக்கவில்லை, இன்னொரு நாள் இந்த காட்சியை படமாக்குவோம் என்றார்.

அழுகை

அழுகை

நான் புதுமுகம் என்பதால் எனக்கு அறிமுக காட்சி வைக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். படம் ஆரம்பிக்கும், நான் அறிமுக காட்சி எதுவும் இன்றி வருவேன் என்று நினைத்தேன். உடனே எனக்கு அழுகை வந்தது. யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைத்து கூலிங் கிளாஸ் அணிந்து ஒரு ஓரமாக உட்கார்ந்து அழுதேன். அதை பார்த்து இயக்குநர் சிரிக்க நான் அழுதது அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்றார் அனன்யா.

அனன்யா

அனன்யா

அனன்யா தற்போது பதி பத்னி அவுர் வோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் கார்த்திக் ஆர்யன், புமி பெட்னேகர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். 1978ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான பதி பத்னி அவுர் வோ படத்தின் ரீமேக் தான் இது. இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X