அழகு தமிழில் பேசும் பிரபாஸ்... நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை

சென்னை: பாகுபலி, சாஹோ படங்கள் தமிழில் எடுக்கப்பட்டாலும், அவை நேரடி தமிழ்படங்கள் கிடையாது. அதனால் நேரடி தமிழ்படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்று சாஹோ பட ஹீரோ நடிகர் பிரபாஸ் தெரிவித்தார்.

நடிகர் பிரபாஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். தெலுங்கு திரையுலகில் கடந்த 2002ஆம் ஆண்டு ஈஸ்வர் படத்தின் மூலம் கால் பதித்தார். இருந்தாலும் 2004ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் படத்தின் மூலமே பிரபலமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான முன்னா, டார்லிங், மிஸ்டர் பெர்ஃபெக்ட் போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

இதன் பின்னரே பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பார்வையில் பட்டார். இவர் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் சரித்திர படைப்பு தான் பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ் மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு மக்களிடையே நல்ல வர வெறுப்பு பெற்றது.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி இரண்டு வெர்சனுமே உலக அளவில் வசூலை வாரிக்குவித்தன. இரண்டு படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.3000 கோடி ரூபாய் வரையிலும் வசூலாகி இருக்கும் என்று கூறப்பட்டது. இதுவரையில் இந்திய திரைப்பட வரலாற்றில் எந்த ஒரு படத்திற்கும் இவ்வளவு வரவேற்பும் வசூலும் கிடைத்ததில்லை என்பதோடு, இந்தப் படத்தில் நடித்த நாயகன் பிரபாஸ் அகில இந்திய அளவில் புகழடைந்துவிட்டார்.

சாஹோ

சாஹோ

பின்னர் பாகுபலி படத்தை ஹிந்தி, மலையாளம் மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளிட்டனர். இந்த திரைப்படங்களின் மூலம் தெலுங்கு நடிகர் பிரபாஸ் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானர். அடுத்து இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வெளிவரயிருக்கும் திரைப்படம் தான் சாஹோ.

பிரம்மாண்ட சாஹோ

பிரம்மாண்ட சாஹோ

இந்த திரைப்படமும், பாகுபலி திரைப்படம் போல பிரம்மாண்டமாக எடுக்கப்படவை. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் நாள் வெளிவர இருக்கிறது. நடிக்கர் பிரபாஸ் சாஹோ திரைப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிக்காக கடந்த வாரம் சென்னை வந்திருந்தார்.

சென்னைக்காரன்

சென்னைக்காரன்

சாஹோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் பிரபாஸ், நான் சென்னையில் பிறந்து சில ஆண்டுகள் வரை வளர்ந்தவன் என்பதால் நான் நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்றும் நல்ல ஒரு கதைக்காக காத்திருக்கிறேன் என்றும் கூறினார். தமிழ் இயக்குநர்கள் கவனிக்கவும்.

அழகு தமிழில் பேசி அசத்தல்

அழகு தமிழில் பேசி அசத்தல்

பாகுபலி, சாஹோ திரைப்படங்கள் தமிழில் எடுக்கப்பட்டாலும் அது நேரடி தமிழ் திரைப்படங்கள் அல்ல. இந்த திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் தெலுங்கில் தான் எடுக்கப்பட்டன என்று கூறினார். நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் பிரபாஸ் தமிழிலேயே பதிலளித்தார் என்பது கவனிக்கத்தக்கது. அவர் தமிழில் பேசியதை தெலுங்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X