வெற்றிமாறன் மாதிரி படம் பண்ணனும்னு ஆசை... ஆனா முடியல!
சென்னை : கலகலப்பான காமெடி கலந்த கமர்சியல் ஹிட் படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்துள்ளது
இந்த நிலையில் மன்மதலீலை என்ற அடல்ட் படத்தை இயக்கியுள்ள வெங்கட்பிரபு வெற்றிமாறன் போல படம் பண்ண ஆசையா இருக்கு என ஓபனாக பேசினார்.

வெங்கட்பிரபுவின் ஸ்பெஷாலிட்டி
தமிழ் சினிமாவில் இப்பொழுது முன்னணி இயக்குனராக உள்ளவர். வெங்கட் பிரபு ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு அந்த வகையில் வெங்கட்பிரபுவின் ஸ்பெஷாலிட்டியே கலகலப்பான காமெடி படங்களை எடுப்பது தான். வெங்கட் பிரபு சென்னை-28 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அதைத் தொடர்ந்து சரோஜா,கோவா என தொடர் வெற்றி படங்களை இளம் நடிகர்களை வைத்து இயக்கி வந்த வெங்கட் பிரபுவுக்கு ஜாக்பாட் அடித்ததுபோல அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஜித்தின் 50வது படமான மங்காத்தா மிகப்பெரிய வெற்றி பெற்றது

எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை
மங்காத்தா வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்த வெங்கட்பிரபு அதைத் தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து பிரியாணி,சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற படங்களை இயக்கினார் ஆனால் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான அவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

டைம் லூப் பாணியில்
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவுடன் இணைந்த மாநாடு திரைப்படம் பல்வேறு சிக்கல்களையும் தாண்டி கடந்த தீபாவளிக்கு வெற்றிகரமாக வெளியானது. பொதுவாக காமெடி ஜானரில் படங்களை இயக்கும் வெங்கட்பிரபு மாநாடு படத்தை டைம் லூப் பாணியில் இயக்கி இருந்தார். தமிழ் சினிமாவில் இதுவரை ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே டைம் பாணியில் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில் மாநாடு திரைப்படம் டைம் லூப் பாணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் திரில்லர் கதை களத்தில் வெளியான மாநாடு வெங்கட்பிரபுவின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இருந்தது .

வெற்றிமாறன் மாதிரி படம் பண்றது
இப்பொழுது அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள மன்மதலீலை என்ற அடல்ட் படத்தை இயக்கியுள்ளார். மன்மத லீலை வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு வெற்றிமாறன் மாதிரியான கதைகளை எடுத்து சமூகத்திற்கு அழுத்தமான மெசேஜை சொல்லும் படங்களை பண்ண வேண்டும் என முயற்சித்தேன். ஆனால் எப்படியாவது நான் எழுதும் கதையில் என்னுடைய காமெடி எனக்கே தெரியாமல் வந்து விடுகிறது. எனவே வெற்றிமாறன் மாதிரி படம் பண்றது கஷ்டம் என்பதை புரிந்து கொண்டேன். என அந்த பேட்டியில் வெங்கட் பிரபு ஓப்பனாக பேசியுள்ளார்


Click it and Unblock the Notifications











