விஜய் அஜித்தை வைத்து மல்டி ஸ்டார் படம் பண்ண ஆசை.. ராகவா லாரன்ஸ்

சென்னை : நடிகர் விஜய் பீஸ்ட் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது

நேர்கொண்ட பார்வை,வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய திரைப்படம் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

அஜித் மற்றும் விஜய் என இருவருக்கும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் ராகவா லாரன்ஸ் அஜித் விஜயை ஒன்றாக இணைத்து மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசையாக உள்ளது என பிரபல தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்

இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது

இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் பீஸ்ட் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் மற்றும் கலகலப்பான காமெடி என எதற்கும் பஞ்சமில்லாமல் வெளியான இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக ஆனது. அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் அடுத்த படத்தில் விஜய் நடித்து வருகிறார் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று கொண்டுள்ளது ரஷ்மிதா மந்தனா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்

அஜித்துடன் கூட்டணி அமைத்த

அஜித்துடன் கூட்டணி அமைத்த

சதுரங்கவேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று என மிரட்டலான படங்களை இயக்கி வந்த இயக்குனர் வினோத் அடுத்ததாக அஜித்துடன் கூட்டணி அமைத்த திரைப்படம் நேர்கொண்டபார்வை பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து அழுத்தமாக பேசப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

மூன்றாவது முறையாக இணைந்துள்ள

மூன்றாவது முறையாக இணைந்துள்ள

இந்நிலையில் அஜித் வினோத் கூட்டணி தொடர்ந்து வலிமை படத்தில் பணியாற்றியது இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது.

Recommended Video

தல அஜித் கூட படம் பண்ணனும் | தமிழ் Youngest Director| Sona Sokkama- First Single
விஜய் அஜித்தை வைத்து மல்டி ஸ்டார் படம்

விஜய் அஜித்தை வைத்து மல்டி ஸ்டார் படம்

அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் நீயா-நானா என போட்டுக்கொண்டு வசூலில் தாறுமாறு செய்து வருகிறது இந்த நிலையில் இப்பொழுது மல்டி ஸ்டார் காஸ்டிங் என்பது தமிழ் சினிமாவில் ட்ரெண்டாகிக் கொண்டுள்ளது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் நடன இயக்குனரும் நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராகவா லாரன்ஸ் விஜய் அஜித்தை வைத்து மல்டி ஸ்டார் படம் எடுக்க ஆசையாக உள்ளது என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X