twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மை டியர் பூதம் படத்துல எனக்கு டான்ஸ் ஆட வரல... பிரபுதேவா ஏன் இப்டி சொன்னாரு தெரியுமா?

    |

    சென்னை: நடனப் புயல் பிரபு தேவா அவர்கள் நடிப்பதற்கு நீண்ட இடைவெளி விட்டு திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். இப்போது அந்தக் குறையை போக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, படங்களாக நடித்து குவித்துத் தள்ளுகிறார்.

    கடந்த நவம்பர் மாதம் பொன் மாணிக்கவேல், ஜனவரி மாதம் தேள் என்று அடுத்தடுத்து படங்கள் அவரது நடிப்பில் வெளியானது. அடுத்ததாக தமிழில் 8, கன்னடத்தில் ஒன்று என மொத்தம் அவர் நடிப்பில் 9 படங்கள் ரிலீஸ் ஆகப் போகிறது.

    யங் மங் சங், பகீரா, ஊமை விழிகள், முசாசி, ஃப்ளாஷ் பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, ரேக்ளா ஆகிய தமிழ்ப் படங்களிலும், லக்கி மேன் என்கிற கன்னடப் படத்திலும் பணிபுரிகிறார்.

    D3 டீமோட ஜாய்ன் ஆன டைரக்டர் வெங்கட் பிரபு.. எப்படீன்னு பாருங்க! D3 டீமோட ஜாய்ன் ஆன டைரக்டர் வெங்கட் பிரபு.. எப்படீன்னு பாருங்க!

    மை டியர் பூதம்

    மை டியர் பூதம்

    பிரபுதேவா பூதமாகவும், மாஸ்டர் அஷ்வந்த் எஜமானவராகவும் நடித்துள்ள இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அதனை புரமோட் செய்ய, இருவரும் பேட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். அதிகமாக பேசுவதற்கு பெயர் போன அஷ்வந்த் பற்றி இயக்குனர் முன்னதாகவே பிரபுதேவாவிடம் கூறி, கொஞ்சம் தள்ளி இருங்கள் என்று சொன்னதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போது அஷ்வந்த் அவரருகில் போனாலும், யோசித்துக் கொண்டிருக்கிறேன் பேசாதே என்று பொய் சொல்லி அனுப்பிவிடுவாராம். கேமராவிற்கு முன்னும் பின்னும் அஷ்வந்திடம் நடித்ததாக பிரபுதேவா வேடிக்கையாக கூறியுள்ளார்.

    டான்ஸ் ஆட சிரமம்

    டான்ஸ் ஆட சிரமம்

    நடனத்திற்கு இந்தியா முழுவதும் பிரபலமான பிரபுதேவாவிற்கு இந்தப் படத்தில் நடனம் ஆட முடியவில்லையாம். காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வீட்டிலேயே இருந்து டச் விட்டுப் போனதாகவும், ஆடுவதற்கு சிரமமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இவர் நடிக்கிறார் என்று தெரிந்ததும், இசையமைப்பாளர் இமான், மாஸ்டர் பாடலை கடினமாக கம்போஸ் செய்துவிட்டதாகவும், அதனை மேட்ச் செய்து ஆடியுள்ளேன் எனவும் பிரபுதேவா கூறியுள்ளார்.

    நம்ம ஆளுங்க பயங்கர புத்திசாலி

    நம்ம ஆளுங்க பயங்கர புத்திசாலி

    இப்போது பல தமிழ் படங்கள் இந்தி மொழியில் ரீமேக் ஆகிறது. பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இருக்கும் நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்க, நம் ஆட்கள் பயங்கர புத்திசாலிகள். லாக் டவுனில் வீட்டில் படம் பார்ப்பதுதான் வேலை. வந்த அனைத்து படங்களையும் பார்த்துவிட்டேன். அனைத்தும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார்.

    எப்போது டைரக்ஷன்

    எப்போது டைரக்ஷன்

    இப்போது இவ்வளவு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபு தேவா அடுத்த ஆன்டு மீண்டும் படங்களை இயக்கப் போகிறாராம். அதற்கான பேச்சு வார்த்தைகள் போய் கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். மை டியர் பூதம் திரைப்படத்தின் இயக்குநர் ராகவன், இதற்கு முன்னர் இயக்கியிருந்த மஞ்ச பை திரைப்படம் போலவே இந்தப் படத்திலும் நகைச்சுவை கலந்த செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் என மாஸ்டர் கூறியுள்ளார்.

    English summary
    நடனத்திற்கு இந்தியா முழுவதும் பிரபலமான பிரபுதேவாவிற்கு மை டியர் பூதம் படத்தில் நடனம் ஆட முடியவில்லையாம். காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வீட்டிலேயே இருந்து டச் விட்டுப் போனதாகவும், ஆடுவதற்கு சிரமமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இவர் நடிக்கிறார் என்று தெரிந்ததும், இசையமைப்பாளர் இம்மான், மாஸ்டர் பாடலை கடினமாக கம்போஸ் செய்துவிட்டதாகவும், அதனை மேட்ச் செய்து ஆடியுள்ளேன் எனவும் பிரபுதேவா கூறியுள்ளார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X