twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் எப்போதும் ஆண்களை நம்புவேன்.. மூன்றாவது திருமணம் சர்ச்சையான நிலையில் நடிகை வனிதா கருத்து!

    |

    சென்னை: மூன்றாவது திருமணம் சர்ச்சையாகி இருக்கும் நிலையில் நடிகை வனிதா, பெண்களை விடவும் ஆண்களை அதிகம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    1 கோடி கேட்ட முதல் மனைவி... வனிதா மூன்றாவது கணவருக்கு சிக்கல்

    நடிகை வனிதா நேற்று முன்தினம் தனது காதலரான பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    மூன்றாவது திருமணம் செய்த வனிதாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், சிலர் வயதுக்கு வந்த மகளை வைத்துக்கொண்டு 40 வயதில் காதல், திருமணம் தேவையா என்றும் விமர்சித்தனர்.

    நம் சிறிய குடும்பத்திற்கு வந்துள்ள பப்பாவை வரவேற்பதில் பிரமிக்கிறேன்.. வைரலாகும் வனிதா மகளின் பதிவு!நம் சிறிய குடும்பத்திற்கு வந்துள்ள பப்பாவை வரவேற்பதில் பிரமிக்கிறேன்.. வைரலாகும் வனிதா மகளின் பதிவு!

    முதல் மனைவி புகார்

    முதல் மனைவி புகார்

    திருமணம் முடிந்த அடுத்த நாளே வனிதாவின் திருமணம் சர்ச்சையாகி இருக்கிறது. வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியான எலிசபெத் ஹெலனை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    இரண்டு குழந்தைகள்

    இரண்டு குழந்தைகள்

    பீட்டர் பாலும் எலிசபெத் ஹெலனும் சுமார் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். எலிசபெத் ஹெலன் மற்றும் பீட்டர் பால் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகளையும் ஹெலன்தான் வளர்த்து வருகிறார். தற்போது பீட்டர் பாலும் வனிதாவும் மூன்றாவது திருமணம் செய்துள்ள விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

    மிகவும் எளிது

    மிகவும் எளிது

    இந்நிலையில் நடிகை வனிதா தனது கணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிவிட்டியிருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ஆண்களை குடிகாரர்கள், பெண் பித்து பிடித்தவர்கள் என அழைப்பது மிகவும் எளிதானது... பெண்களை விட எனக்கு அதிகமான ஆண்கள் நண்பர்களாக உள்ளனர்..

    நான் ஆண் பேரினவாதி

    நான் ஆண் பேரினவாதி

    நான் எந்த நாளிலும் ஆண்களையே நம்புவேன்.. சில பெண்கள் அதிக பொறாமை கொண்டவர்களாகவும், தந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள்.. என்னை ஒரு ஆண் பேரினவாதி என்று அழையுங்கள், ஆனால் நான் ஒரு பெண்ணியவாதி அல்ல.. நான் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்.. பாலினத்தைப் பொருட்படுத்தாமல்.. இவ்வாறு வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actress Vanitha supports her husband. She has twitted that, I would trust a man any day..some women are more jealous and Cunning then men...call me a male chauvinist but not a feminist.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X