நான் காட்டு பசில இருக்கேன்.. இணையத்தில் ட்ரெண்டாகும் சிம்பு பகிர்ந்த வீடியோ
சென்னை: நான் காட்டு பசில இருக்கேன் என நடிகர் சிம்பு அளித்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியுள்ளது. அதனை அவரும் ஷேர் செய்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சிலம்பரசன். சிறுவயதிலேயே நடிக்க வந்ததால் என்னவோ அவருக்குள் திறமை அதிகமாகவே இருக்கிறது. லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்த சிலம்பரசன் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

பன்முகத் திறமை உடைய சிம்பு
நடிகராக மட்டுமின்றி இயக்குநராக, பாடகராக, பாடலாசிரியராகவும் ஜொலித்திருக்கிறார் சிம்பு. அப்படி அவர் இயக்கிய மன்மதன் படம் மிகப்பெரிய ஹிட்டானது. அடுத்ததாக அவர் இயக்கிய வல்லவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் சிம்புவுக்கு இருக்கும் இயக்குநர் அந்த இரண்டு படங்களின் மூலம் வெளிவந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

சிம்புவை சுற்றிய சர்ச்சைகள்
சிம்பு எந்த அளவுக்கு திறமைசாலியோ அந்த அளவுக்கு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுந்தன. குறிப்பாக காதல் விஷயங்களில் சிம்புவின் பெயர் ஆரம்பகாலத்தில் அதிகமாகவே அடிபட்டது. ஆனால் அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதால் அதில் யாருக்கும் தலையிட உரிமையில்லை என சிம்பு ரசிகர்கள் கூறினர். அதேபோல், அவரை சுற்றிய சர்ச்சைகளில் முக்கியமான ஒன்று, சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒழுங்காக வருவதில்லை என்பதுதான். அதேசமயம், சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒழுங்காக வரமாட்டார்தான். அவர் வந்துவிட்டால் எவ்வளவு பெரிய சீனாக இருந்தாலும் அதை ஒரே டேக்கில் முடித்துவிடுவார் என பலர் பொதுவெளியில் கூறியிருக்கின்றனர்.

திரைத்துறையிலிருந்து ஒதுங்கிய சிம்பு
ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சிம்பு. அந்த சமயத்தில் அவருக்கு இனோரு காதல் பிரச்னையும் ஏற்பட்டது. இதனையடுத்து இமயமலை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் ஆனார். மேலும் முழு ஆத்திகவாதியாகவும் மாறினார் எஸ்டிஆர். நிலைமை இப்படி இருக்க சிம்பு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர்.

கம்பேக் கொடுத்திருக்கும் சிம்பு
இந்தச் சூழலில் தனது உடல் எடையை குறைத்துவிட்டு ஈஸ்வரன், மாநாடு படங்கள் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதில் மாநாடு படம் மிகப்பெரிய ஹிட்டாகி நூறு கோடி ரூபாய் வசூலித்தது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அப்படி அவர் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்டாக தற்போது பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

காட்டு பசியில் இருக்கும் சிம்பு
இந்நிலையில் தான் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சிம்பு. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இப்போது நான் பயங்கர பசியில் இருக்கிறேன். காட்டு பசி என்று சொல்வார்களே அந்தப் பசியில் இருக்கிறேன். சிறப்பாக நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. முன்னர் ஒருமுறை இதேபோல் எனக்கு இருந்தது. அப்போதுதான் மன்மதன் போன்ற படங்கள் செய்தேன்.
ஒருவேளை அதுபோல் நானே மீண்டும் இயக்கலாம். இல்லை அதுபோன்ற படங்களில் நடிக்கலாம். எனது அடுத்தடுத்த படங்களின் வரிசை நன்றாகவே இருக்கிறது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே என்னை திருப்திப்படுத்தும் வகையில் எதையாவது செய்ய வேண்டும்" என பேசியிருக்கிறார். தற்போது அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது


Click it and Unblock the Notifications











