For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  #IAmABlueWarrior: கொரோனா போராளிகள், முன்களப் பணியாளர்களுக்கு உதவ கைகோர்க்கும் Josh App!

  |

  சென்னை: கொரோனா இரண்டாவது அலை காரணமாக, நமது இந்தியா வரலாற்றின் மிகக் கடினமான காலகட்டத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. கொரோனா அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், பல நல்ல உள்ளங்கள், களப் போராளிகள் மக்களுக்கு எல்லா வழிகளிலும் உதவ முன்வந்துள்ளனர்.

  கொரோனா தொடர்பான தகவல்களை அதிகம் வழங்குவது முதல், கொடிய வைரஸுக்கு எதிரான நாட்டின் இந்த போராட்டத்திற்கு பண நன்கொடை அளிப்பது வரை, எல்லோரும் உதவி செய்வதற்கு சிறந்த முறையில் முயற்சி செய்கிறார்கள். நமது மக்களுக்கு உதவுவதற்காக, டெய்லிஹண்டின் ஷாட் வீடியோ ஆப், ஜோஷ் (Josh) விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிக்காக 'ப்ளூ ரிப்பன்' (Blue Ribbon) என்ற முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. (ஜூன் 18ம் தேதி வரை மட்டுமே)

  #IAmABlueWarrior: Josh App Launches Fundraiser To Help COVID Warriors And Frontline Workers

  'ப்ளூ ரிப்பன்' மூலம், முன்கள பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான போராளிகள் போன்ற, கொரோனா தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விழிப்புணர்வு ஏற்படுத்துவது Josh நோக்கமாகும். Josh ஆப், சமூக ஊடகங்களில் பயனர் உருவாக்கிய வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும். ஷாட் வீடியோ ஆப் உள்ளேயும், வெளியேயும் இந்த முயற்சியை செய்ய அதன் மிகப்பெரிய படைப்பாளி குழுவை கேட்டுக்கொள்கிறது.

  இந்த புதிய முன்னெடுப்பு மூலம், Josh பெரிய அளவில் பங்களிப்பு செய்யும். 'ப்ளூ ரிப்பன்' மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு Josh மூலம் PM CARES (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதிக்கு நன்கொடை வழங்கப்படும்.

  சரியான செய்தியை பரப்புவதன் மூலம் கொரோனா மற்றும் அதன் பின் விளைவுகளை சமாளிக்க சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் எவ்வாறு முக்கிய பங்கு வகித்தார்கள் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்துவோரை மனதில் வைத்து, Josh அதன் மிகவும் பிரபலமான நபர்களை ஆப்புக்கு உள்ளேயும் வெளியேயும் 'ப்ளூ ரிப்பன்' முன்னெடுப்பை பலமாக்க பயன்படுத்துகிறது.

  பிரபல இசை அமைப்பாளரும் பாடகருமான கிளின்டன் செரெஜோவும் 'ப்ளூ ரிப்பன்' முயற்சியுடன் தொடர்பில் உள்ளார். பிரபலமான கோக் ஸ்டுடியோ பாடல் 'மடாரி' மற்றும் பல இசையமைப்புகளுக்கு பெயர் பெற்ற செரிஜோ, இந்த இடர் காலத்தில் வெளிச்சம் கொண்டுவருவதற்காக Josh குறித்த சிறப்பு விழிப்புணர்வு வீடியோவைக் வெளியிடுவார்.

  பிரபலங்கள் மட்டுமல்ல, அனைத்து Josh ஆப் பயனர்களும், உங்களுக்கு பிடித்த பிரபலங்களை போலவே இந்த மனிதாபிமான காரணத்திற்காக உங்கள் படைப்பாற்றலை காண்பிக்கலாம். Josh முன்னெடுக்கும் #IAmABlueWarrior முயற்சியில் எவ்வாறு பங்கேற்பது என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா?

  Josh ஆப் பயனாளர்கள், ப்ளூ ரிப்பன் முன்னெடுப்பில் பங்கேற்க 8 துணை தீம்களில் வீடியோ தயாரிக்கலாம்.

  1. டபுள் மாஸ்க் போடும் அவசியம்
  2. தடுப்பூசி விழிப்புணர்வு
  3. கொரோனா பற்றிய உண்மைகள்
  4. சமூக இடைவெளி
  5. சானிட்டைசர் செய்ய வேண்டிய அவசியம்
  6. கொரோனா தூய்மை
  7. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்
  8. ஆக்சிஜன் விழிப்புணர்வு

  இந்த தலைப்புகளில் நீங்கள் வீடியோ தயாரித்து, #IAmABlueWarrior என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி அப்லோடு செய்யுங்கள். இந்த ஹேஷ்டேக், நாங்கள் அளிக்க உள்ள நன்கொடையை கணக்கிட உதவும்.

  இந்த முன்னெடுப்பின் முயற்சியாக, வீடியோ உருவாக்குவோர்கள், தங்கள் இன்ஸ்ட்டாகிராம் ஹேண்டில் டிபி புகைப்படத்தில் இந்த விழிப்புணர்வு பிரச்சார லோகோவை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

  Josh உடன் கைகோர்ப்பதோடு, இந்த கஷ்டமான காலகட்டத்தில், சக இந்தியர்களுக்கு உதவ உங்கள் நண்பர்களையும் ஊக்கப்படுத்துங்கள். ப்ளூவாரியராக நீங்கள் தயாரா?

  English summary
  India is going through one of the toughest times in history due to the second wave of COVID-19, which has affected people from all walks of life. Amid this crisis, many Good Samaritans have come forward to help people in every possible way. From amplifying information related to COVID-19 to donating funds for the nation's battle against the deadly virus, everyone is trying their level best to lend a helping hand. Joining in to lend a helping hand to our citizens,Josh short video app has also launched an awareness campaign called the ‘Blue Ribbon Initiative - #IAmABlueWarrior’ (valid until 18th June 2021) .
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X