இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் ஓடக் கூடாது: வீடியோ வெளியிட்ட இயக்குனர்

By Siva

Recommended Video

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்துக்கு கண்டனம் சொன்ன விஜய் மில்டன் - வீடியோ

சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் ஓடக் கூடாது என்று விரும்புவதாக இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

கவுதம் கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை பார்த்து திரையுலக பிரபலங்கள் வேதனை அடைந்துள்ளனர். இது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ மூலம் கூறியிருப்பதாவது,

ஓடக் கூடாது

ஓடக் கூடாது

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் ஸ்னீக் பீக் பார்த்தபோது இந்த படம் ஓடக் கூடாது என்று எனக்கு தோன்றியது. எனக்கே கஷ்டமாக இருக்கிறது. இந்த துறையில் இருந்து கொண்டு ஒரு படம் ஓடக் கூடாது என்று நினைப்பது எவ்வளவு கேவலமான விஷயம்.

உழைப்பு

உழைப்பு

எந்த படமாக இருந்தாலும் ஓடினால் தான் நல்லது. ஒவ்வொரு ஜெயிக்கிற படத்திற்கு பின்னால் இருக்கும் அதே உழைப்பு தோற்கும் படத்திற்கு பின்னாலும் உள்ளது.

தெரிந்தே தான்

தெரிந்தே தான்

அந்த ஒரு வார்த்தையை வைத்து தான் ஸ்னீக் பீக்கையே டிசைன் செய்துள்ளார்கள். மிகத் தெளிவாக தாங்கள் செய்வது என்னவென்று தெரிந்து செய்திருக்கிறார்கள். அந்த தைரியம் வந்து பயமாக இருக்கிறது.

பயம்

பயம்

யாரோ ஒருத்தர் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் இன்டஸ்ரியில் உள்ள முக்கியமான நபர் இதை தயாரித்திருக்கிறார் என்றால் அது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது.

ஏ படம்

ஏ படம்

அவங்க ஒன்னும் நாங்க ராமாயணம் எடுக்கிறோம் என்று கூறிவிட்டு ஏ படம் எடுக்கவில்லை. இதை தான் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு தான் செய்துள்ளனர். வேண்டும் என்றால் பாருங்க இல்லை என்றால் பார்க்காதீங்க என்று கூறிவிட்டார்கள். அதனால் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை.

இயக்குனர்கள்

இந்த படம் ஓடினால் இது தான் இளைஞர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து அனைவரும் இது போன்று படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். பேசாமல் இருப்பது தப்பு என்று தோன்றியது. டிஸு பேப்பரை எடுத்து கண்ணீரை துடைத்துவிட்டு போக வேண்டியது தான் என்றார் விஜய் மில்டன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X