இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் காயத்ரியை இப்படி கலாய்ச்சுட்டாங்களே...#IAMK
Recommended Video

சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் பிக் பாஸ் காயத்ரியை கலாய்த்துள்ளார்கள்.
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் ஹிட்டாகியுள்ளது.
அடல்ட் காமெடி படம் எடுத்தால் ஹிட்டாகும் என்று தெரிந்து தான் இந்த படத்தை தயாரித்துள்ளார் ஞானவேல்ராஜா.

கேவலம்
பணம் சம்பாதிக்க இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டுமா என்று பிரபலங்கள் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். ஆனால் ரசிகர்களோ தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

காயத்ரி
பிக் பாஸ் வீட்டில் நேரம், நாள் கூறுவது போன்றே இந்த படத்திலும் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் ரெபரன்ஸ் மட்டும் அல்ல காயத்ரியையும் கலாய்த்துள்ளனர்.

பேய்
பேயை விரட்ட பங்களாவுக்கு வரும் மொட்டை ராஜேந்திரனும், பாலாவும் தங்கத்தை திருடிவிட்டு எஸ்கேப் ஆக திட்டமிடுவார்கள். அவர்கள் தங்கத்தை திருட முயற்சி செய்யும்போது திடீர் என்று திரும்பிப் பார்த்தால் அவர்கள் பின்னால் பேய் நிற்கும். பேயை பார்த்த ராஜேந்திரன் காயத்ரி டா என்பார். அதற்கு பாலாவோ காயத்ரி இதை விட கேவலமாக இருக்கும் என்பார்.

பிக் பாஸ் காயத்ரி
மொட்டை ராஜேந்திரனும், பாலாவும் கூறும் காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி தான் என்று படத்தை பார்த்தவர்கள் கூறி சிரிக்கிறார்கள். இது அந்த அம்மணிக்கு தெரிந்தால் நிச்சயம் கோபப்படுவார்.
புகைப்படம்
தனகு அக்கா எடுத்த புகைப்படத்தை காயத்ரி ரகுராம் இன்று காலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தனது அக்காவின் திறமையை வியந்து பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











