twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகன் ஆவேன்னு நினைக்கலை..நெட்பிளிக்ஸின் கிரைம் தொடர்.. நடிகரானார் ஐஏஎஸ் அதிகாரி!

    By
    |

    டெல்லி: ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், வெப் தொடரில் நடிகராக அறிமுகமாகிறார்.

    நெட்பிளிக்ஸில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான வெப்சீரிஸ், 'டெல்லி கிரைம்'. இதில், ஷெபாலி ஷா, ரசிகா துக்கல், அடில் ஹூசைன், டென்ஸில்ஸ் ஸ்மித் உட்பட பலர் நடித்திருந்தனர்.

    இந்த தொடருக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது.

    கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அந்த ஹீரோயின் சாயல் தெரியுதே.. பிரபல நடிகையை அவருடன் ஒப்பிடும் ஃபேன்ஸ்!கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அந்த ஹீரோயின் சாயல் தெரியுதே.. பிரபல நடிகையை அவருடன் ஒப்பிடும் ஃபேன்ஸ்!

    நடிப்புக்கு வரவேற்பு

    நடிப்புக்கு வரவேற்பு

    இதில் நிஜ ஐஏஎஸ் அதிகாரி, அபிஷேக் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இப்போது டெல்லியில் இணை கமிஷனராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே 'ஜார் பந்த்ரா' என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த தொடரில் முழு நீள கேரக்டரில் நடிக்கிறார். இதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல முடியும் என்கிறார் இந்த அதிகாரி.

    சமூக மாற்றம்

    சமூக மாற்றம்

    இதுபற்றி அவர் கூறும்போது, நான் நடிக்க வருவேன் என்று எந்த கட்டத்திலும் நினைத்ததில்லை. நிர்வாகம் இன்று பல மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் வலுவான அமைப்பை உருவாக்க, தொடர்ந்து உழைத்து வருகிறோம். அபிவிருத்தி மற்றும் மேம்பாடு என்பது நிர்வாகத்தின் மூலமாக மட்டுமில்லாமல், சமூக மாற்றத்தின் மூலம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

    தொடர் மூலம்

    தொடர் மூலம்

    மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது, சினிமா. அதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லலாம் என்றும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் நினைக்கிறேன். பல்வேறு பிரச்னைகளில் சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை சினிமா செய்திருக்கிறது. இந்த தொடர் மூலம், இந்த நேரத்தில் நானும் அதை செய்கிறேன்' என்கிறார்.

    Recommended Video

    God Man Webseries வெளியாகுமா? தொடரும் சர்ச்சை Daniel Balaji, Gayathri Raghuram
    அனுபவம் இல்லை

    அனுபவம் இல்லை

    இந்த தொடரின் காஸ்டிங் டைரக்டரான முகேஷ் சாப்ரா கூறும்போது, அபிஷேக்கை எனக்குத் தெரியும் என்பதால், அந்த கேரக்டருக்கு அவரால் மட்டுமே நியாயம் சேர்க்க முடியும் என்று நம்பினேன். அவரிடம் சொன்னேன். அவருக்கு நடிப்பு அனுபவம் இல்லை என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஸ்கிரீனில் அவர் வேறு ஒருவராக இருக்கிறார் என்றார்.

    English summary
    IAS officer Abhishek Singh is all set to make his acting debut with the second season of Netflix crime drama Delhi Crime.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X