twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தர்பார் படத்தை மறைமுகமாக கலாய்த்த ஐஏஎஸ் அதிகாரி.. சண்டைக்கு வந்த ரஜினி ரசிகர்கள்!

    |

    சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான தர்பார் படத்தை ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் மறைமுகமாக கலாய்த்துள்ளார்.

    25 வருடங்கள் கழித்து தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளார். இந்நிலையில், தர்பார் படத்தை பார்த்த ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழே சண்டை பிடித்து வருகின்றனர்.

     விடமாட்டார் போலிருக்கே... அந்த நடிகைக்காகவே பிரபல ஹீரோ விழாவுக்கு வந்தார்... ஶ்ரீரெட்டி பரபரப்பு விடமாட்டார் போலிருக்கே... அந்த நடிகைக்காகவே பிரபல ஹீரோ விழாவுக்கு வந்தார்... ஶ்ரீரெட்டி பரபரப்பு

    காப்

    காப்

    அன்புக்கு நான் அடிமை, மூன்று முகம், பாண்டியன் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறைவான போலீஸ் படங்களிலேயே நடித்துள்ளார். அலெக்ஸ் பாண்டியனாக ரஜினி நடித்த மூன்று முகம் படம் இன்று வரைக்கும் சிறந்த போலீஸ் படங்களின் வரிசையில் இடம்பிடித்து இருக்கிறது. இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளார்.

    ஐஏஎஸ் ட்வீட்

    ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், " ஐயா, டேய் தமிழ் இயக்குனர்களா.. இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா.. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது" என பங்கமாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    மறைமுகமாக

    மறைமுகமாக

    நேற்று வெளியான தர்பார் திரைப்படத்தைத் தான் ஐஏஎஸ் அதிகாரி மறைமுகமாக கலாய்த்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தர்பார் படத்தில் லாஜிக் மீறல்கள் அதிகமாக உள்ளது தான் படத்தின் வேகத்தை குறைக்கிறது என விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    படமா பாருங்க

    அந்த அதிகாரியின் ட்வீட் ரஜினி ரசிகர்களை டென்ஷன் ஆக்கியுள்ளது. படத்தை படமாக பார்க்க தெரியாத ஒரு ஐஏஎஸ்.. நாட்டில் நடக்கும் துப்பாக்கி சூட்டிற்கெல்லாம் நாங்க லாஜிக் கேட்டால்.. உங்க நிலைமை? என ஒரு ரசிகர் பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    புடிச்சா பாருங்க

    உங்க ஒருத்தருக்கு படம் எடுக்கலை, மக்களுக்காக எடுத்தாங்க.. புடிச்சா பாருங்க இல்லனா விட்டுடுங்க.. படம் எடுக்காதீங்கன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என இந்த ரஜினி ரசிகர் பொங்கியுள்ளார்.

    எல்லா இயக்குநர்களுக்குமா?

    நீங்க சொன்னது, பாரதிராஜா, மணிரத்னம், ராம், மிஷ்கின் உள்ளிட்ட தமிழ் இயக்குநர்களுக்கும் சேர்த்துத் தான் சொன்னீங்களா என இந்த நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ட்ரோல்

    என்னடா படத்துல கதை, லாஜிக் என்று எதுவுமே இல்லை? என கேட்பதாகவும், அதற்கு திருடாமல் நானா எழுதுனது என முருகதாஸ் சொல்வது போன்ற மீம்கள் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

    ஹியூமன் ரைட்ஸ் வயலேஷன்

    எந்த படத்தை சார் நீங்க சொல்றீங்க என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு அந்த ஹியூமன் ரைட்ஸ் வயலேஷன் படம் தான் என மறுபடியும் அழுத்தம் திருத்தமாக தர்பார் படத்தை மறைமுகமாக அந்த அதிகாரி சாடியுள்ளார்.

    போராளி

    மீடியா வெளிச்சம் தேட கிளம்பிட்டாரு அடுத்த போராளின்னு அந்த ஐஏஎஸ் அதிகாரியையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

    மரியாதை

    படத்தை பற்றி விமர்சிக்க உரிமை இருக்கு, அதுக்குன்னு இயக்குநர்களை ‘டேய்' போட்டு விமர்சிக்கக் கூடாது கொஞ்சம் மரியாதையா பேசுங்க என இந்த நெட்டிசன் அந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

    Read more about: darbar தர்பார்
    English summary
    IAS officer Alex paul menon criticize Darbar director indirectly. Rajini fans started comments fight with him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X