நடிகையிடம் தவறாக நடந்துகொண்டது ஏன்? கைதான 'காக்கி சட்டை' வில்லனை விசாரிக்க கமிட்டி!
மும்பை: சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டது பற்றி, கைது செய்யப்பட்ட நடிகரிடம் விசாரிக்க படக்குழு கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ராஸ். வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழில், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் காக்கிசட்டை படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

வித்யாபாலனின் ஷெர்னி
இந்தியில், கம்பெனி, லால் சலாம், டெல்லி 6, பாம்பே டு கோவா, கல்லி பாய் உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது, ஷெர்னி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வித்யாபாலன் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாலாகாட் மாவட்டத்தில் நடந்து வருகிறது.

தவறாக நடந்தார்
இதை அமித் மசுர்கர் இயக்குகிறார். விக்ரம் மல்கோத்ரா தயாரிக்கிறார். படக்குழுவினர் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து ஷூட்டிங் சென்று வருகின்றனர். இந்நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை ஒருவரிடம் விஜய் ராஸ் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நடிகை போலீசில் புகார் அளித்தார்.

படப்பிடிப்பு அரங்கம்
வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜய் ராஸை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் மும்பை திரும்பினார். பணியிடத்தில் இதுபோன்ற தவறுகளை அனுமதிக்க முடியாது என்ற இயக்குனரும் தயாரிப்பாளரும் அவரை படப்பிடிப்பு அரங்கத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்ற முடிவோடு தயாரிப்பாளரும் இயக்குனரும் இருந்தனர்.

விசாரணை கமிட்டி
இதையடுத்து அவர் பங்கேற்க வேண்டிய இரண்டு காட்சிகள் பாக்கி இருந்தும் அவரை அழைக்கவில்லை. அதனால், அவர் நேராக போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க படக்குழு, விசாரணை கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











