இதுக்கு தனி கவனிப்பா? இந்தியன் 2 புரோமோசன் வேலைகளில் தீவிரமாக இறங்கிய கமல்; வீடியோவைப் பாருங்க!

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விசயம் என்றால் அது ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிதான். மொத்தம் 20 அணிகள் களமிறங்கியுள்ள இந்த மிகப்பெரிய தொடரில் சின்னச் சின்ன அணிகள் என கருதப்படுகின்ற அணிகளும் சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் இல்லாத அணிகள் என பட்டியலிடப்பட்ட அணிகளும் ஜாம்பவான்களைக் கொண்டுள்ள அணிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடி வருகின்றது. வழக்கமாக ஐசிசி தொடர் என்றாலே அதில் அனல் பறக்கும் ஆட்டமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அமைவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிதான். இதற்கு இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் சூழலும் காரணமாக பார்க்கப்படுகின்றது.

கமல் ஹாசன் வாழ்த்து

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை 2024இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று அதாவது ஜூன் 9ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டி சரியாக இந்திய நேரப்படி இரவு 7.52 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், “ வணக்கம் இந்தியா, தேசத்திற்காக கர்ஜிக்கவேண்டிய வேளை நெருங்கிவிட்டது. எல்லைகள் கடந்து இந்தியர்களாக வீறு கொள்வோம். ஒவ்வொரு போட்டியிலும் நாட்டிற்கான நமது ஆர்ப்பரிப்பு தீரம் மிக்க நமது வீரர்களின் நெஞ்சில் புரட்சிப் பாடலாக ஒலிக்கட்டும். 7.52 மணிக்கு இந்தியாவுடன் ஒன்றாக நிற்போம். இந்தியன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ICC T20 WC 2024 Actor Kamal Haasan India Vs Pakistan Indian 2 Anirudh Shankar Kamal Haasan Wishes

நேரலையில் கமல்?

இந்த வீடியோ இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக மட்டும் இல்லாமல், இந்தியன் 2 படத்திற்கான புரோமஷனாகவும் பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் இந்தியன் படக்குழு நேரலையில் பங்கு கொள்ளவுள்ளதா என்பது குறித்தும் அந்த வீடியோவில் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் கமல்ஹாசன் நேரலையில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியன் படத்தின் நீட்சி

இந்தியன் 2 படம் 1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியானபோது கமல் ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை படமாக்கியுள்ளனர். அதில் கமல் ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மிகவும் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தினை லைகா புரோடெக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. அடுத்த மாதம் அதாவது ஜீலை மாதம் 12ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.அதேபோல் கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ள கல்கி 2898 ஏ.டி படம் இந்த மாதம் 27ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X