இந்திய பாடல்களின் ஐகான்’ லதா மங்கேஷ்கருக்கு கொரோனா...ஐசியூவில் சிகிச்சை

முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். 92 வயதான லதா மங்கேஷ்கர், தற்போது மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

மூன்றாவது அலை

மூன்றாவது அலை

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பேரலை முன்னெப்போதும் இல்லாத அளவில் வேகமாக பரவி வருகிறது. பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது.

கலைத்துறையையும் விட்டு வைக்காத கொரோனா

கலைத்துறையையும் விட்டு வைக்காத கொரோனா

கலைத்துறையில் பிரபலங்களையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா வட்டாரங்களிலும் பிரபல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நடிகர் மகேஷ்பாபு, திரிஷா, குஷ்பூ என பிரபலங்கள் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளனர்.

கொரோனா தொற்று ஐசியூவில் சிகிச்சை

கொரோனா தொற்று ஐசியூவில் சிகிச்சை

இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக பிரபல பின்னணி பாடகி, இந்திய பாடல்களின் ஐகான் என அழைக்கப்படும் முதுபெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லதா மங்கேஷ்கருக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன, மேலும் வயது காரணியைப் பார்த்து, மருத்துவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்று மருத்துவமனை வட்டார தகவல் வெளியாகியுள்ளது.

முதல் அலையின்போது 2019 நவம்பரில் மூச்சுத்திணறல் காரணமாக மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ​​மங்கேஷ்கரின் தங்கையான உஷா, மங்கேஸ்கருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கூறியிருந்தார்.

நாடே கொண்டாடிய பிறந்த நாள்

நாடே கொண்டாடிய பிறந்த நாள்

கடந்த ஆண்டு செப்டம்பரில், மங்கேஷ்கர் தனது 92வது பிறந்தநாளை தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடினார். அவரது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் பெரிதாக சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டது. ​​​​சமூக ஊடகங்களில் அனைத்து தரப்பிலிருந்தும் இசை அடையாளமான லதா மங்கேஷ்கருக்கு ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு மற்றும் வாழ்த்துக்களும் குவிந்தன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், மங்கேஷ்கரின் "நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக" பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தார். அவரது பிறந்த நாளை நாடே கொண்டாடியது.

தீதிக்கு பிரதமரின் வாழ்த்து

தீதிக்கு பிரதமரின் வாழ்த்து

"மதிப்புள்ள லதா தீதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவளுடைய இனிமையான குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் மீதான அவரது பணிவு மற்றும் ஆர்வத்திற்காக அவர் மதிக்கப்படுகிறார். தனிப்பட்ட முறையில், அவருடைய ஆசீர்வாதங்கள் பெரும் பலத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. லதா தீதியின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன், "என்று பிரதமர் மோடி அப்போது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

1000-க்கும் மேற்பட்ட படங்கள், 70 ஆண்டு கலைப்பயணம்

1000-க்கும் மேற்பட்ட படங்கள், 70 ஆண்டு கலைப்பயணம்

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மங்கேஷ்கர் 1,000 க்கும் மேற்பட்ட ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பல்வேறு பிராந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இந்தியா முழுவதும் அல்லாமல் உலகெங்கும் பல்வேறு மொழி பேசும் கோடிக்கணக்கான மக்கள் அவரது ரசிகர்களாக உள்ளனர். இந்திய பிரதமர் முதல் பல்வேறு பிரபலங்கள், விவிஐபிக்கள், விஐபிக்கள் அவரது தீவிர ரசிகர்கள் என்றால் மிகையல்ல.

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர்

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர்

92 வயதாகும் லதா மங்கேஷ்கரின் கடைசிப் பாடல் "சௌகந்த் முஜே இஸ் மிட்டி கி", இது மார்ச் 30, 2021 அன்று இந்திய ராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் தனது கானக்குரலால் கட்டிப்போட்டுள்ள லதா மங்கேஷ்கருக்கு 2001 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது.

பெறாத பட்டமில்லை...உடல் நலன் காக்க பிரார்திக்கும் ரசிகர்கள்

பெறாத பட்டமில்லை...உடல் நலன் காக்க பிரார்திக்கும் ரசிகர்கள்

லதா மங்கேஷ்கர் பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பல தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். வயோதிகம் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்ட அவரை மிகக்கவனமாக மருத்துவர்கள் அவரது உடல்நிலையை பேணி பாதுகாத்து வரும் நிலையில் அவர் பூரண உடல் நலன் பெற வேண்டும் என்பது கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X