இதயத்திருடன் ஹீரோயினை ஞாபகமிருக்கா.. இந்த வயசுல செம ஹாட்டா சட்டையை கழட்டி போஸ் கொடுத்துருக்காரே!
சென்னை: ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ் நடித்த இதயத்திருடன் படத்தில் அறிமுகமான நடிகை காம்னா ஜெத்மலானியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
திருமணமாகி கணவர், குழந்தைகள் என வாழ்ந்து வரும் இந்த மச்சக்காரன் பட நடிகை இன்னமும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கும் நடிகை காம்னாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதயத்திருடன் ஹீரோயின்: கடந்த 2005ம் ஆண்டு சரண் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ் நடித்த இதயத்திருடன் படத்தில் செம க்யூட்டான ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை காம்னா ஜெத்மலானி.
போலியாக அவர் உருவாக்கும் டி. மகேஷ் பெயரில் ஜெயம் ரவி கேரக்டர் டிசைன் செய்யப்பட்டு இருக்கும் "உன்னைத் தொட்ட உற்சாகத்தில்" "அரேபியா" பாடல்கள் எல்லாம் அப்போது செம ஹிட் அடித்தது.

மச்சக்காரன்: இதயத்திருடன் படம் எதிர்பார்த்த ஹிட் அடிக்காத நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அதிகம் நடிக்க சென்று விட்டார் காம்னா. அதன் பிறகு மீண்டும் ஜீவன் நடித்த மச்சக்காரன் படத்திலும் செம அழகாக நடித்து அசத்தி இருப்பார்.
ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படத்திலும் தனது குண்டு பல்பு கண்ணை காட்டி ரசிகர்களை கவர்ந்த காம்னா 2011ம் ஆண்டு காசேதான் கடவுளடா படத்தில் நடித்தார். அது தான் தமிழில் இவர் நடித்த கடைசி படம். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்காத நிலையில், கோலிவுட்டுக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு கிளம்பி விட்டார் காம்னா.

சட்டையை கழட்டி: சமீபத்தில் தெலுங்கில் வெளியான வெப்சீரிஸ் விவஸ்தாவில் நடித்திருந்த காம்னா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பக்கம் சட்டையை கழட்டி உள்ளாடை தெரியும்படி செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
சொட்டச் சொட்ட நனைந்தபடி சட்டையை அணிந்து கொண்டு ஜீன்ஸ் பேன்ட் உடன் 37 வயதை கடந்த நடிகை காம்னா வெளியிட்டுள்ள போட்டோக்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் "ஹாட்டீ" என்றும் செம சூப்பர் என்றும் கமெண்ட் போட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











