Idhayam Murali Box Office Day 3: அதர்வாவின் இதயம் முரளி 3வது நாள் வசூல்.. வார இறுதியில் கலெக்‌ஷன் எப்படி?

சென்னை: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம் இதயம் முரளி. அதர்வா, தமன், டிராவிட், கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்ததால் வசூலும் முதல் இரண்டு நாட்களில் கணிசமாக இருந்தது. இந்நிலையில் மூன்றாவது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான மறைந்த நடிகர் முரளிக்கு தமிழ் திரையுலகில் பெரிய அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்த படங்களில் ஒன்று, இதயம். இதனால் அவரை திரையுலகத்தினர் மட்டும் இல்லாமல் ரசிகர்களுமே பலரும் இதயம் முரளி என்று குறிப்பிட்டு வந்தனர். 100க்கும் மேற்பட்ட படங்களில் முரளி நடித்தாலும், அவருக்கு இந்த பெயர் நிலைத்து விட்டது.

Idhayam Murali Box Office Day 3 in India Which Reach 10 Crores Details Here

இப்படி இருக்கையில் இதயம் முரளி என்ற டைட்டிலுடன் முரளியின் மகன் அதர்வா நடிக்கிறார் என்றதுமே 80'ஸ் கிட்ஸ்களுக்கு நாஸ்டாலிஜிக்கான உணர்வையும், 90'ஸ் கிட்ஸ்களுக்கு அட இது நம்ம ஒன் சைடு லவ் படமாச்சே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் படத்தின் பாடல்கள் டீசர் என எல்லாம் ஒரு ஃபீல் குட் உணர்வைக் கொடுக்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கின.

வசூல்: இப்படி இருக்கையில் படம் ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளில் சுமார் ரூபாய் 2.19 கோடிகளையும், இரண்டாவது நாளில் ரூபாய் 3.15 கோடிகளும், மூன்றாவது நாளில் ரூபாய் 3.50 கோடிகளும் வசூலாகி உள்ளது என்று சாக்நிக் வலைதளம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வசூல் கணக்கை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் உள்ளதால், படம் வசூல் ரீதியாக நல்ல சக்சஸைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

Idhayam Murali Box Office Day 3 in India Which Reach 10 Crores Details Here

எதிர்பார்ப்பு: மேலும் இந்த வசூல் கணக்கு என்பது இந்திய அளவில் தான் என்பதால், வெளிநாடுகளில் படத்தின் வசூல் குறித்த தகவல்கள், உலக அளவில் மொத்த வசூல் உள்ளிட்டவற்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் வரும் காலங்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று படக்குழு நம்பிக்கையில் உள்ளது. படத்தின் சில காட்சிகளை ரசிகர்கள் தியேட்டரில் வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த காட்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பதால், படத்தைப் பார்க்க இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எண்ணத்தை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X