16 கோடி வசூலை கடந்த இதயம் முரளி.. திங்கட்கிழமையும் ஆதரவு தந்த ரசிகர்கள்.. அதர்வாவுக்கு ஹிட் கிடைக்குமா?
சென்னை: நடிகர் அதர்வா முரளி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் நடித்த இதயம் முரளி திரைப்படம் உலகளவில் 16 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய இதயம் முரளி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது. ஜூலை 10ம் தேதி வெளியான இதயம் முரளி முதல் நாளில் 2 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய நிலையில், 2வது நாளான சனிக்கிழமை 3 கோடிக்கும் அதிகமாகவும் ஞாயிற்றுக்கிழமை 4 கோடிக்கும் அதிகமாகவும் வசூல் செய்தன.

திங்கட்கிழமையான நேற்று வழக்கம் போல வசூல் சற்றே குறைந்தாலும் மோசமான நிலைக்குச் செல்லாத நிலையில், உலகளவில் இந்த படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதயம் முரளி 4 நாள் வசூல்: அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், பகத் ஃபாசில், மாளவிகா மோகனன், தமன், நட்டி நட்ராஜ், நிஹாரிகா, டிராவிட் செல்வம், ரக்ஷன், ஏஞ்சலின், சின்னி ஜெயந்த், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூலை 10ம் தேதி வெளியான இதயம் முரளி திரைப்படம் முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் அதிகபடியாக 12.31 கோடி நெட் வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் அறிவித்துள்ளது.
உலகளவில் 16 கோடி வசூல்: ஓவர்சீஸில் அதர்வா நடித்த இதயம் முரளி படத்துக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் சூழலில் இந்த படம் வெளிநாடுகளில் மட்டும் 4 நாட்களில் 4 கோடி வசூலை ஈட்டி ஒட்டுமொத்தமாக இதுவரை 16.31 கோடி நெட் வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது.
அதர்வாவுக்கு வெற்றி கிடைக்குமா?: ஆகாஷ் பாஸ்கரன் சென்னை, மதுரை, திருச்சி, அமெரிக்கா என ஏகப்பட்ட இடங்களில் பெரும் செலவு செய்து ஸ்கூல் போர்ஷன், காலேஜ் போர்ஷன், டபுள் ஆக்ஷன் என டெக்னிக்கல் ரீதியாகவும் பணத்தை வாரி இரைத்து இதயம் முரளி படத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், இந்த 16 கோடி வசூல் எல்லாம் பத்தாது என்றும் சுமார் 40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 40 கோடி வசூலையாவது தியேட்டரிக்கலாக செய்தால் தான் அதர்வாவுக்கு வெற்றிக் கிடைக்கும் என்கின்றனர்.
பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைத் தாண்டி இளைஞர்கள் மற்றும் ஒன் சைடு லவ்வர்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக இதயம் முரளி மாறியுள்ளது. இந்த வாரம் அன்பே டயானா, ஒடிசி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், இந்த வார இறுதியிலும் இதயம் முரளி கல்லா கட்டினால் தான் 30 முதல் 40 கோடி வசூலை தொடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications