Idhayam Murali Day 1 Box Office: இதயம் முரளி வசூல்.. அதர்வா - கயாடு லோஹருக்கு அள்ளிக் கொடுத்ததா தமிழ்நாடு?
சென்னை: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம் இதயம் முரளி. அதர்வா, தமன், டிராவிட், கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்ததால், முன் பதிவிலேயே கணிசமான அளவிற்கு புக்கிங் இருந்தது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான மறைந்த நடிகர் முரளிக்கு தமிழ் திரையுலகில் பெரிய அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்த படங்களில் ஒன்று, இதயம். இதனால் அவரை திரையுலகத்தினர் மட்டும் இல்லாமல் ரசிகர்களுமே பலரும் இதயம் முரளி என்று குறிப்பிட்டு வந்தனர். 100க்கும் மேற்பட்ட படங்களில் முரளி நடித்தாலும், அவருக்கு இந்த பெயர் நிலைத்து விட்டது.

இப்படி இருக்கையில் இதயம் முரளி என்ற டைட்டிலுடன் முரளியின் மகன் அதர்வா நடிக்கிறார் என்றதுமே 80'ஸ் கிட்ஸ்களுக்கு நாஸ்டாலிஜிக்கான உணர்வையும், 90'ஸ் கிட்ஸ்களுக்கு அட இது நம்ம ஒன் சைடு லவ் படமாச்சே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் படத்தின் பாடல்கள் டீசர் என எல்லாம் ஒரு ஃபீல் குட் உணர்வைக் கொடுக்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கின.
முதல் நாள் வசூல்: இப்படி இருக்கையில் படம் ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு ப்ரீ புக்கிங்கில் மட்டும் சுமார் 52 லட்சங்களுக்கு மேல் வசூல் அமைந்தது. அதேபோல் படம் முதல் நாளில் சுமார் 2.19 கோடிகளை இந்திய அளவில் வசூலித்துள்ளது. இந்த தகவலை சாக்நிக் வலைதளம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வசூல் கணக்கை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் உள்ளதால், படம் வசூல் ரீதியாக நல்ல சக்சஸைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

நம்பிக்கை: அதேபோல் படத்தில் நடித்துள்ளவர்களுக்கு அந்த கதாபாத்திரங்கள் மிகவும் கச்சிதமாக பொருந்துவதாக ரசிகர்கள் பலரும் பாராட்டுவது மொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் மொத்த படமும் மிகவும் கலர்ஃபுல்லாக இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மேக்கிங் திருப்தி அளிப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications