Idhayam Murali Day 5 Box Office: 5வது நாளில் தேறியதா? தடுமாறியதா? அதர்வாவின் இதயம் முரளி வசூல்!

சென்னை: ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், மாளவிகா மோகனன், ஃபஹத் பாசில், தமன், நிஹாரிகா, பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் செல்வம், நட்டி நட்ராஜ், சின்னி ஜெயந்த், ஜோனிதா காந்தி உள்ளிட்ட பலர் நடித்த இதயம் முரளி படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த வாரம் வெளியான படங்களிலேயே ஃபீல் குட்டான படம் இதுதான் என ரசிகர்கள் இதயம் முரளி படத்தை தியேட்டர்களுக்குச் சென்று பார்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே படத்தில் உள்ள நட்சத்திர பட்டாளம் தான்.

Idhayam Murali Day 5 Box Office Atharvaa Murali seems little bit happy and get appreciation

தமன் இசையில் வெளியான பாடல்களும், படத்தில் இடம்பெற்ற நல்ல சீன்களை சோஷியல் மீடியாவில் க்ளிப்பிங்ஸாக வெளியிட்டு படத்திற்கு ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். 5வது நாளில் இதயம் முரளி வசூல் தேறியதா? அல்லது தடுமாறியதா? என்பது குறித்து இங்கே காணலாம் வாங்க..

அதர்வாவுக்கு நல்ல படம்: பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அதர்வா 16 ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அமலா பால் உடன் இணைந்து அவர் நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் இதயம் முரளி படத்தை போலவே ஃபீல் குட் படமாக அமைந்தது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் கேமரா ஒர்க் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், மாளவிகா மோகனன், ஜோனிதா காந்தி என அதர்வாவின் வாழ்க்கையில் 4 ஹீரோயின்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஏஞ்சலின், நிஹாரிகா உள்ளிட்ட நடிகைகளின் பங்களிப்பும் படத்துக்கு பெரிய பிளஸ்.

5வது நாள் வசூல் எப்படி?: 5வது நாளான செவ்வாய்க்கிழமையும் உலகளவில் 1 கோடிக்கும் அதிகமான வசூலை அதர்வா முரளியின் இதயம் முரளி ஈட்டி தொடர்ந்து தாக்குப்பிடித்து வருகிறது. உலகளவில் கடந்த 5 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் சுமார் 17.72 கோடி கிராஸ் கலெக்‌ஷனை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியிலும் இதயம் முரளி படம் பாக்ஸ் ஆபீஸில் மேஜிக் செய்தால் 30 முதல் 40 கோடி வரை வசூல் ஈட்டும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X