twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரவேற்பு மட்டுமல்ல... வசூலிலும் குறை வைக்கவில்லை 'இது நம்ம ஆளு'

    By Manjula
    |

    சென்னை: கடந்த வாரம் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 14 கோடிகளை வசூல் செய்திருக்கிறது.

    3 வருடப் போராட்டங்களுக்குப் பின் சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    வசூல் ரீதியாக இது நம்ம ஆளுவுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

    இது நம்ம ஆளு

    இது நம்ம ஆளு

    சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி, சூரி காமெடி ஆகியவை இப்படத்தில் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இது தவிர வேறு பெரிய படங்கள் வெளியாகாதது, பாண்டிராஜின் இயக்கம், அதிக திரையரங்குகள் ஆகியவையும் இப்படத்திற்கு கைகொடுத்துள்ளன.

    சென்னை

    சென்னை

    முதல் வாரத்தில் இப்படம் சென்னையில் மட்டும் 1.18 கோடிகளை வசூல் செய்திருக்கிறது. இதுவரை சிம்புவின் எந்தப் படத்திற்கும் இப்படி ஒரு ஓபனிங் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    இதுதவிர தமிழ்நாடு முழுவதும் இப்படம் முதல் வாரத்தில் 14 கோடிகளை வசூல் செய்திருக்கிறது. இப்படத்தை வாங்கி வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அரண்மனை 2 படத்திற்குப் பின் இது நம்ம ஆளு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

    மருது

    மருது

    விஷால்-ஸ்ரீதிவ்யாவின் மருது 2 வது வாரத்தில் 37.97 லட்சங்களுடன் 2 வது இடத்திலும், ஹாலிவுட் படமான எக்ஸ்மேன் அபோகாலிப்ஸ் 11.22 லட்சங்களுடன் 3 வதும் இடத்தையும் தக்க வைத்திருக்கிறது.

    இறைவி

    இறைவி

    ஜூன் 3ம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த இறைவியும், எழிலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்கள் வெளியாகிறது. இந்த 2 படங்களின் வரவால் இது நம்ம ஆளு படத்தின் வசூல் பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English summary
    Box Office: Idhu Namma Aalu 1st Weekend Collection in Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X