»   »  "இது நம்ம ஆளு"... சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா... கெஞ்சிக் கேட்கும் பாண்டிராஜ்

"இது நம்ம ஆளு"... சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா... கெஞ்சிக் கேட்கும் பாண்டிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இது நம்ம ஆளு படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா என்று அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படம் சமீப காலமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் பாண்டிராஜ் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன.


இந்நிலையில் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் படத்தை விரைவாக வெளியிடுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளரை கேட்டுக் கொண்டிருக்கிறார்.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா, ஜெய் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் இது நம்ம ஆளு. காதல் முறிவிற்குப் பின்னர் சிம்பு - நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.


படத்தின் சிடி கவர்

சமீபத்தில் இப்படத்தின் நாயகி நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் சிடி கவரை வெளியிட்டு விரைவில் ஆடியோ வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். படத்தின் சிடி கவரானது ட்விட்டர் மேப்பில் சென்னை அளவில் ட்ரெண்டானது இதனைப் பார்த்த பாண்டிராஜ் ஒரு சிடி கவரே ட்ரெண்டாகிறதா என்று ஆச்சரியமாக கேட்டிருந்தார். மேலும் படத்த விட்டா என்று கேட்டு சீக்கிரம் விடுங்கப்பா என்று தயாரிப்பாளர்களை வேண்டிக் கொண்டிருக்கிறார்.


சிம்பு

சிம்பு

இதற்கிடையில் இப்படத்தை சிம்பு தனது நண்பர்களுடன் இணைந்து பார்த்ததாகவும் படம் சிம்புவை மிகவும் படம் கவர்ந்து விட்டதாகவும் கூறுகின்றனர். படத்தில் அந்தக் குத்துப் பாடல்களை வைக்காமலே படம் நன்றாக இருப்பதால், பாடல்கள் இல்லாமலே படத்தை வெளியிட்டு விடலாம் என்ற முடிவிற்கு சிம்பு வந்திருக்கிறாராம்.


பாண்டிராஜ்

சிம்பு படம் பார்த்தது குறித்து பாண்டிராஜ் கூறுகையில் "எனது ஹீரோ சிம்பு இது நம்ம ஆளு படத்தை நண்பர்களுடன் இணைந்து பார்த்தார். படம் அவருக்கு சந்தோஷத்தை அளித்திருக்கிறது எனவே விரைவில் இப்படம் வெளியாகும், ரசிகர்களாகிய உங்களையும் இப்படம் கவரும் என்று கூறியிருக்கிறார். மேலும் விரைவில் இப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகும்" என்றும் தெரிவித்து இருக்கிறார்.


டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் பாடல்கள் கண்டிப்பாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். தற்போது சிம்புவிற்கு படம் சந்தோஷம் கொடுத்திருப்பதால் இது தொடர்பான இறுதி முடிவை டி.ராஜேந்தர் விரைவில் வெளியிடுவார் என்று கூறுகின்றனர்.


நவம்பரில் ஆடியோ

நவம்பரில் ஆடியோ

இது நம்ம ஆளு ஆடியோ நவம்பரில் வெளியாகும் என்றும் படம் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


நயன்தாரா

நயன்தாரா

இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறதாம். படம் இந்த வருடத்தில் வெளியாகும் பட்சத்தில் நயனின் திரை வாழ்க்கையில் மேலும் ஒரு மைல்கல்லாக இது நம்ம ஆளு இருக்குமாம். தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளால் மகிழ்ச்சியில் இருக்கும் நயனுக்கு இது மேலும் ஒரு பரிசாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


English summary
Idhu Namma Aalu Director Pandiraj Tweeted "My hero Iam_str saw #INA and loved it . Happy I made him happy , means a lot comin from him hope u guys love it as well ...Audio comin soon".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil