சிம்பு - நயன்தாராவின் இது நம்ம ஆளு.. குடும்பத்துடன் பார்க்கலாம்
சென்னை: சிம்பு- நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இது நம்ம ஆளு படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைத்துள்ளது.
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, ஜெய், சந்தானம், சூரி மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு.

3 வருடங்களுக்கு முன் ஒரு சுபயோக தினத்தில் தொடங்கப்பட்ட இப்படம் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காததால், அடா ஷர்மாவை ஆட விட்டு ஒரு குத்துப்பாடலுடன் இப்படத்தை சிம்பு முடிவுக்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதன் மூலம் 30% வரிவிலக்கு மற்றும் குடும்பத்துடன் பார்க்கும் படம் என 2 நன்மைகள் இப்படத்திற்குக் கிடைத்துள்ளன.
இது நம்ம ஆளு யூ சான்றிதழ் கைப்பற்றியதை இயக்குநர் பாண்டிராஜ் மகிழ்ச்சியுடன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி மே முதல்வாரம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீக்கிரம் வாங்கப்பா..


Click it and Unblock the Notifications











