»   »  இது நம்ம ஆளு மறுபடியும் தள்ளிப்போனால்?.. கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

இது நம்ம ஆளு மறுபடியும் தள்ளிப்போனால்?.. கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல வருடங்களாக தள்ளிப்போன 'இது நம்ம ஆளு' மே 20 ல் வெளியாகும் என பாண்டிராஜ் ஒருவழியாக அறிவித்து விட்டார்.

இதனால் அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில், என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் படத்தைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Idhu Namma Aalu Memes

இந்நிலையில் இப்படம் மீண்டும் சில பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் சொன்ன தேதியில் இப்படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு மீண்டும் எழுந்துள்ளது.


இதோ அதோ என ஏற்கனவே 3 வருடம் ஓடிவிட்டது. இதில் மீண்டும் பிரச்சினைகள் எழுந்தால் இப்படம் வெளியாக இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.இதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தான். ஒருபுறம் இயக்குநர், மற்றொருபுறம் தயாரிப்பாளர் என 2 வகையிலும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.


எது கிடைத்தாலும் மீம்ஸ் போடும் நெட்டிசன்கள் தற்போது பாண்டிராஜையும் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். '24' படத்திற்குப் பின் 'இது நம்ம ஆளு' வரிசையில் தயாராக நிற்கிறது.


ஒருவேளை இந்தமுறையும் தாமதமானால் கமலின் 'மருதநாயகம்' படமே வெளியாகிவிடும் என்று கிண்டலாக மீம்ஸ் போட்டுள்ளனர். இதில் ஹைலைட் என்னவென்றால் இந்த மீம்சை பாண்டிராஜ் ரீட்வீட் செய்திருப்பது தான்.


English summary
Idhu Namma Aalu Related Memes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil