இது நம்ம ஆளு உங்களை 100 முறை சிரிக்க வைக்கும் - பாண்டிராஜ்
சென்னை: இது நம்ம ஆளு படம் உங்களை 100 முறையாவது சிரிக்க வைக்கும் என்று இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்திருக்கிறார்.
3 வருடங்கள் கடந்தும் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் இது நம்ம ஆளு வெளியானபாடில்லை.

எனினும் இப்படத்தின் இயக்குநரும், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான பாண்டிராஜ் இப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் தற்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
மேலும் ரசிகர்கள் இப்படத்தை மறந்து விடக்கூடாது என்பதற்காக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி இப்படம் குறித்த தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

இது நம்ம ஆளு குறித்து சமீபத்தில் "இந்த வாரத்தில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கிறேன். படம் உங்களை 100 முறையாவது சிரிக்க வைக்கும்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் மே மாதம் கண்டிப்பாக இது நம்ம ஆளு வெளியாகும் என்றும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது நம்ம ஆளு படத்திற்குப் பின் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க 2, கதகளி என 2 படங்கள் வெளியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











