இடிமுழக்கம் ரீமேக் படமல்ல… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் சீனுராமசாமி !
சென்னை : சீனுராமசாமி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ளள இடிமுழக்கம் மலையாள படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வந்த நிலையில், சீனுராமசாமி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இப்படத்தில் ஜீவி பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாமனிதன்
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

ஆக்ஷன் த்ரில்லிங்
சீனு ராமசாமி ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் ஜி.வி பிரகாஷுடன் இடிமுழக்கம் படத்தில் இணைந்திருக்கிறார். இதுவரை வந்த சீனு ராமசாமியின் படங்களில் சற்று மாறுதலாக, ஆக்ஷன் த்ரில்லர் கிராமத்து பின்னனி கொண்ட திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி தேனியில் 20 நாட்கள் நடைபெற்று வந்தது. அதன்பிறகு, தொடர்ந்து புதுச்சேரியில் நடைபெற்று வந்த நிலையில், மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

மலையாள படத்தின் தழுவல்
இந்நிலையில் இடி முழக்கம் திரைப்படம் மலையாளத்தில் 2017ம் ஆண்டு வெளியான லக்ஷியம் படத்தின் ரீமேக் என்று தகவல்கள் வேகமாக பரவின.இந்த திரைப்படத்தை அக்ஸர் கான் இயக்கியிருந்தார், படத்தின் திரைக்கதையை எழுதியவர் பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் என்றும் தகவல்கள் வெளிவந்தன. இந்த கதையைத்தான் சீனுராமசாமி இடிமுழக்கம் என்ற பெயரில் எடுத்துவருவதாக சினிமா வட்டத்தில் பேச்சுக்கள் உலா வந்தன.

ரீமேக் படமல்ல
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீனுராமசாமி இடிமுழக்கம் ரீமேக் படமல்ல, நானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரப்பரப்பான கதை , இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம். இடம் பொருள் ஏவல் படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். நன்றி என்று கூறியுள்ள சீனுராமசாமி பரபரப்பாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்


Click it and Unblock the Notifications











