பேய்த்தனமானது ‘இடியட்‘ டிரைலர்… ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை !

சென்னை : மிர்ச்சி சிவா நடிக்கும் இடியட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இரண்டே நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இத்திரைப்படத்தில்,மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், மயில்சாமி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். ராஜாபட்டாச்சர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அனைவரையும் சிரிக்கவைத்தார்

அனைவரையும் சிரிக்கவைத்தார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா நிகழ்ச்சியில் பல படங்களை அப்படியே உல்டாவாக மாற்றி அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர் இயக்குனர் ராம்பாலா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகர் சந்தானம் மிகவும் பிரபரலமானார். சந்தானம் மிகவும் பிரபலமாவதற்கு இவரின் உல்டா புல்டா கலக்கல் காமெடியே முக்கிய காரணமாக கருதப்பட்டது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

சின்னத்திரையில் தனது திறமையை நிரூத்து வந்த ராம்பாலா, தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். இந்த படத்தின் முதல்பாகம் வெற்றி பெற்றதை தில்லுக்கு துட்டு இரண்டாவது பாகத்தை இயக்கினார் இந்த திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

இந்நிலையில் தற்போது இவர் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணியை வைத்து இடியட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ஊர்வசி, ஆனந்தராஜ், மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். ராஜாபட்டாச்சர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்

இடியட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இரண்டு நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு மிர்ச்சி சிவா தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றும், வீட்டில் மகிழ்ச்சியாக இருங்க , நல்லதே நடக்கும் என்று பதிவிட்டுள்ளார். ராம் பாலாவின் முந்தைய படங்களைப் போலவே இந்த படத்திலும், பேய்களை கலாய்க்கும் நகைச்சுவைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: idiot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X