இளையராஜா பயோபிக் என்ன ஆச்சு?.. இட்லி கடை ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்.. கிளம்பிய கேள்விகள்!

சென்னை: நடிகர் தனுஷ் என்பதை விட சீக்கிரமே இயக்குநர் தனுஷ் என்றே ரசிகர்கள் அழைக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்றே தெரிகிறது. ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ் இந்த ஆண்டு ராயன் படத்தை இயக்கி நடித்து மிகப்பெரிய இயக்குநராக மாறியுள்ளார். அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படமும் ரெடி ஆகிவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கத் தொடங்கிய இளையராஜா பயோபிக் திரைப்படம் என்ன ஆனது என்கிற கேள்வியை தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

idly kadai dhanush ilaiyaraaja biopic

சமீபத்தில் தொடங்கப்பட்ட இட்லி கடை திரைப்படம் அதிரடியாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகப் போகும் அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அதே நேரம் இளையராஜா ரசிகர்களை இந்த அறிவிப்பு சற்றே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இட்லி கடை ரிலீஸ் தேதி: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துவரும் இட்லி கடை படத்தில் அவருக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நித்யா மேனன் நடித்து வருகிறார். இட்லி கடை திரைப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

குபேரா வருது: இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 15-ஆம் தேதி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வெளியாகிறது. குபேரா திரைப்படம் எந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு குபேரா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பொங்கல் பண்டிகை வரை சிறப்பான வசூல் வேட்டையை அந்த படம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

idly kadai dhanush ilaiyaraaja biopic

இளையராஜா பயோபிக் என்ன ஆனது?: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவராத நிலையில், மீண்டும் அருண் மாதேஸ்வரன் உடன் இணைந்து இளையராஜா பயோபிக் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ஆனால், அந்த படத்தை திடீரென ஹோல்டில் வைத்து விட்டு இட்லி கடை படத்தை ஆரம்பித்த தனுஷ் அந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து, ஏப்ரல் 10ம் தேதி 5 நாட்கள் விடுமுறையை டார்கெட் செய்து ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். அப்போ இளையராஜா பயோபிக் என்ன ஆனது என்றும் எப்போது தான் அந்த படம் ரெடியாகும் என்றும் இளையராஜா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X