இட்லி கடை vs வேலையில்லா பட்டதாரி.. என்னங்க தனுஷை போட்டு இந்த ஓட்டு ஓட்டுறாரு.. ரெண்டும் ஒரே மாவு தானா?
சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தில் வருவதை போலவே ஸ்க்ரீன்பிளேவை இட்லி கடை படத்துக்கும் தனுஷ் பயன்படுத்தியுள்ளதாக இரண்டு படங்களில் இருந்தும் ஒத்துப் போகும் காட்சி அமைப்புகளை கம்பேர் செய்து ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
தியேட்டருக்கே செல்லாமல் ஓடிடியில் புதிய படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு கடந்த 2 வாரங்களாக ஏகப்பட்ட ஜாக்பாட் தொடர்ந்து அடித்து வருகிறது. தியேட்டரில் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் வந்த படங்கள் எல்லாம் வரிசை கட்டி வெளியான நிலையில், ஓடிடி ரசிகர்கள் அதை பார்த்துவிட்டு டீகோட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

காந்தாரா சாப்டர் 1, லோகா என பல நூறு கோடி வசூல் செய்த படங்களையும் ஓடிடி ரசிகர்கள் ஓவர்ரேட்டட் என கலாய்த்து வரும் நிலையில், இட்லி கடை படமும் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.
இட்லி கடை vs வேலையில்லா பட்டதாரி: ஹீரோ இன்ஜினியரிங் படித்துவிட்டு பெரிய கம்பெனியில் வேலைக்கு செல்கிறார், ஓனர் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள வாய்ப்பு அமைகிறது. ஆனால், இவர் பக்கத்து வீட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார். பணக்கார வில்லன் தனுஷை அழிக்க நினைக்கிறான். ஆனால், கடைசியில், தனுஷை எதுவும் செய்ய முடியாது என அவருடைய இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்று நட்பாகி விடுகிறான்.
இதே பழைய மாவை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் இட்லி சுட்டு இட்லி கடை படத்தை அதே பாணியில் கொடுத்துள்ளார் என ரசிகர் ஒருவர் பிரித்து மேய்ந்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இட்லி கடையிலும் ஷாலினி பாண்டேவை விட்டு விட்டு நித்யா மேனன் உடன் காதல், அம்மாவுக்கு பதில் இங்கே அப்பா, அம்மா இருவரும் இறந்து விடுவது, அம்மா அம்மா பாடல் போல, இங்கே எஞ்சாமி கூட வரும் பாடல், அதே பணக்கார வில்லன் அருண் விஜய் கடைசியில் மாவாட்டுவது என உருட்டியிருக்கிறாராம்.
கூலி vs விக்ரம்: சமீபத்தில், இதே வேலையைத்தான் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதையை வைத்து அப்படியே கூலி படத்துக்கு செய்திருந்தார் என்றும் வெற்றியடைந்த படங்களின் ஃபார்முலாவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொஞ்சம் ஆல்டர் செய்தால் புதிய படங்கள் ரெடியாகி விடுகின்றன என்றும் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான கற்பனை வளம் இன்றைய இயக்குநர்களிடம் அறவே கிடையாது என்றும் அதன் காரணமாகவே கூலி மற்றும் இட்லி கடை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











