twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐசியூலலாம் இல்லை.. வீணாக வதந்திகளை பரப்ப வேண்டாம்.. டென்ஷனான இத்ரிஸ் எல்பா!

    |

    லண்டன்: அவெஞ்சர்ஸ், தோர், லூதர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இத்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கனடா நாட்டு அதிபரின் மனைவி சோபி கிரிகோயர் ட்ரூடியோவை இத்ரிஸ் எல்பா இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு விழாவில் சந்தித்த நிலையில், அவரிடம் இருந்து தான் இத்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா வைரஸ் பரவியது என்றும், இத்ரிஸ் எல்பா தற்போது, ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஏகப்பட்ட வதந்திகள் அவரை சுற்றி கிளம்பியுள்ளது.

    Idris Elba is forced to deny hes in a critical condition after hoax video

    ஆனால், சோபி கிரியோயரிடம் இருந்து தான் கொரோனா வைரஸை பெறவில்லை என்றும், வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டு பத்திரமாகத்தான் இருக்கிறேன், ஐசியூவில் எல்லாம் இல்லை. வீணாக யாரும் வதந்திகளை பரப்பவோ, பரவும் வதந்திகளை நம்பவோ வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு இத்ரிஸ் எல்பா கூறியுள்ளார்.

    மேலும், கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கொரோனா பாதிப்பு குறித்து ட்விட்டர் வீடியோவில் பேசிய இத்ரிஸ் எல்பாவுடன் அவர் மனைவி சப்ரினா தோவ்ரே எல்பா உடன் இருந்ததும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    இங்கிலாந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி, கொரோனா பாதித்த நபர், தனது குடும்பத்தாரிடம் இருந்தும் தனிமைப்பட்டு இருக்க வேண்டும் என்பதை இத்ரிஸ் மீறியுள்ளார் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    அதற்கு, பதிலளித்த இத்ரிஸ் எல்பா, நல்ல வேளையாக தனக்கு அதிகளவில் கொரோனா தாக்கம் ஏற்படவில்லை என்றும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி, என்றும் கூறியுள்ளார்.

    47வயதாகும் இத்ரிஸ் எல்பா, அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக தேர்வாகும் பட்டியலிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Idris Elba has been forced to deny he is in a 'critical condition' after a hoax video claimed he was in intensive care amid his coronavirus diagnosis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X