நாலாபுறமும் குத்து வாங்கும் RJ பாலாஜி.. இளையராஜா விவகாரத்தில் விளாசிவிட்ட பிரபலம்

சென்னை: கருப்பு படம் கமர்ஷியலாக ஒர்க் அவுட் ஆனது மொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சில் ஆழ்த்தினாலும். படத்தில் போகிற போக்கில் வைக்கப்பட்ட காட்சி ஒன்றில் இசைஞானி இளையராஜாவை தேவையில்லாமல் சீண்டுவது போல அமைந்துள்ளது என்று ரசிகர்கள் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தனர். இப்படி இருக்கையில், தற்போது இந்த விவகாரம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதை உணர்ந்த படக்குழு வருத்தம் தெரிவித்தாலும், ரசிகர்கள் விடுவதாக இல்லை. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி, இயக்குநர் RJ பாலாஜியை தனது ஸ்டைலில் காட்டமான முறையில் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் தளப் பதிவில், " நடிகரும், இயக்குநருமான RJ பாலாஜி அவர்களது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'கருப்பு' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!

இத்திரைப்படத்தில், ஐயா இளையராஜாவின் காப்புரிமை கோரல் தொடர்பாக ஒரு காட்சியைக் கேலியாக அமைத்து, பிறகு, படத்தயாரிப்பு நிறுவனம், அதற்கு ஐயா இளையராஜா அவர்களிடம் வருத்தம் தெரிவித்த செய்தியைப் படித்தேன்.

Idumbavanam Karthi Slams RJ Balaji Over Ilaiyaraaja Controversy in Karuppu

இச்சமயத்தில் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியும், இனமானத் தமிழர்களும், திரைக்கலைஞர்களும் செய்த போராட்டத்தை கேலிசெய்து பேசினார் இதே ஆர்.ஜே.பாலாஜி. "ஐ.பி.எல்.லை நிறுத்தினால் தண்ணி வந்துடுமா?" எனப் பகடி செய்தார். அதனையே அவர் நடித்த 'எல்.கே.ஜி.' திரைப்படத்திலும் வசனமாகப் பேசி, எள்ளி நகையாடினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கில், 'காவிரிச் சிக்கல் தமிழ்நாட்டில் ஒரு சிக்கல் இல்லை; அந்த மாநிலத்தின் தலைநகரத்திலே பெரிய சலனம் இல்லை' என உச்ச நீதிமன்றத்தில் அப்போது வாதிட்டது கர்நாடக அரசு. ஒருவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டிருந்தால், "பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சென்னையில் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்கிறார்கள். ஆகவே, காவிரி தமிழர்களுக்கு முதன்மைச்சிக்கல் இல்லை" எனும் வாதத்தை கர்நாடக அரசு முன்வைத்திருக்கும்.

காவிரி: ஏற்கனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பான 192 டி.எம்.சி. தண்ணீர் என்பதை, 177.25 டி.எம்.சி.யாக தனது வாதத்தின் மூலம் குறைக்கச் செய்தது கர்நாடக அரசு. ஆம்! தமிழ்நாட்டினுடைய நிலத்தடி நீர் மட்டத்தின் இருப்பு 20 டி.எம்.சி. ஆக இருப்பதைக் காரணமாகக் காட்டி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யைக் குறைக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது கர்நாடக அரசு. அந்த வாதத்தையும் ஏற்று, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீர்வரத்தை 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்துத் தீர்ப்பு அளித்தது உச்ச நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Idumbavanam Karthi Slams RJ Balaji Over Ilaiyaraaja Controversy in Karuppu

ஐபிஎல்: அதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தமிழகமெங்கும் வலுபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் எனும் கேளிக்கை தேவையில்லை என்பதைக் கருதியும், அந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதனையே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதமாக வைக்கக்கூடும் என்பதாலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அந்த ஆண்டு சென்னையில் நடத்த எதிர்ப்புத் தெரிவித்துப் போராடினோம். அந்தப் போட்டி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றாலும், அதற்குப் பிறகு, அந்தாண்டு சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.

கேலி: உண்மை இப்படியிருக்க, வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் அந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் துளியும் உணராது கேலி, கிண்டல் செய்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவாக, கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 68 நாட்கள் புழல் சிறையில் இருந்தவன் எனும் அடிப்படையில் ஆர்.ஜே.பாலாஜியின் அந்தக் கேலி, கிண்டல் எனக்கு வலித்தது; கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆர்.ஜே. பாலாஜியின் நகைச்சுவையைப் பல சமயம் ரசித்திருக்கிறேன். ஆனால், ஒரு மண்ணுரிமைப் போராட்டத்தை நகைச்சுவைப் பொருளாக மாற்ற முனைவதை ஒருநாளும் ரசிக்க முடியவில்லை.

கிண்டலுக்கு இடமில்லை: நிற்க! ஐயா இளையராஜா கோரும் காப்புரிமை என்பது உரிமை தொடர்பானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என உணர்ந்து கொண்டது போல, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தக் கோரி அன்றைக்குப் போராடிய அண்ணன் சீமான், ஐயா மணியரசன், ஐயா பாரதிராஜா, அண்ணன் வெற்றிமாறன் உள்ளிட்ட இனமானத் தமிழர்களின் போராட்டமும் நியாயமானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என்பதை ஆர்.ஜே.பாலாஜி இனியாவது உணர்ந்து கொள்வார் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X